

புதுடெல்லி
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தி யாவின் தீபக் புனியா 86 கிலோ எடைப் பிரிவு தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். அதே வேளையில் 65 கிலோ எடைப் பிரிவில் முதலிடத்தை பஜ்ரங் புனியா இழந்துள்ளார்.
சர்வதேச மல்யுத்த சம்மேளனம் தரவரிசை பட்டியலை வெளி யிட்டுள்ளது. இதில் ஆடவருக்கான 86 கிலோ எடைப் பிரிவில் இந்தியா வின் தீபக் புனியா 82 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் தீபக் புனியா வெள்ளிப் பதக்கம் கைப்பற்றி இருந்தார்.
மேலும் இந்த ஆண்டில் இஸ் தான்புல் நகரில் நடைபெற்ற தொட ரில் வெள்ளிப் பதக்கமும், ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தார் தீபக் புனியா. தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தியதன் மூலம் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். உலக சாம்பியனான ஈரானின் ஹசன் யாஸ்தானியைவிட தீபக் புனியா 4 புள்ளிகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார்.
அதேவேளையில் 65 கிலோ எடைப் பிரிவில் முதலிடம் வகித்து வந்த இந்தியாவின் நட்சத்திர வீரரான பஜ்ரங் புனியா, உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண் கலப் பதக்கம் மட்டுமே கைப்பற்றி யதால் தரவரிசைப் பட்டியலில் 63 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ரஷ்யாவின் ராஷிடோவ் 65 புள்ளிகளுடன் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.
57 கிலோ எடைப் பிரிவு தரவரிசை யில் இந்தியாவின் ரவி தஹியா 39 புள்ளிகளுடன் 5-வது இடத்துக் கும், மகளிர் பிரிவில் வினேஷ் போகத் (53 கிலோ எடைப் பிரிவு) 4 இடங்கள் முன்னேறி 2-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். இவர்கள் இருவரும் உலக சாம்பி யன்ஷிப் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தனர். - பிடிஐ