Last Updated : 22 Jul, 2015 06:52 PM

 

Published : 22 Jul 2015 06:52 PM
Last Updated : 22 Jul 2015 06:52 PM

கிரிக்கெட்டின் நம்பகத்தன்மையை பிசிசிஐ மீட்டெடுப்பது அவசியம்: லஷ்மண்

ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் உள்ளிட்ட முறைகேடுகள் ‘துரதிர்ஷ்டமானது’, ஐபிஎல் கிரிக்கெட்டின் நம்பகத்தன்மையை பிசிசிஐ மீட்டெடுப்பது மிகவும் அவசியம் என்று முன்னாள் வீரர் விவிஎஸ். லஷ்மண் கூறியுள்ளார்.

தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், நீதிபதி லோதா கமிட்டியின் ஐபிஎல் தீர்ப்பு குறித்து கூறிய லஷ்மண், “ஐபிஎல் முறைகேடுகள் துரதிர்ஷ்டவசமானது என்றாலும், பிசிசிஐ ஒரு குழு அமைத்து நீதிபதி லோதா கமிட்டி அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்த குழு அமைத்திருப்பது, ஆட்டத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியே. நம்பகத்தன்மையை மீட்டெடுக்க முடியும்.

ஆட்டத்தை விட எந்த வித ஒரு தனிநபரும் முக்கியம் அல்ல. ஆட்டம்தான் வெற்றி பெற வேண்டும். இது ஒரு மோசமான சம்பவம், பிசிசிஐ நிச்சயம் இந்த கறையை அகற்ற முடியும்.

ஐபிஎல் என்பது ஒரு சிறந்த பொருள். ஐபிஎல் கிரிக்கெட் நல்ல தரமான ஆட்டத்தை கொடுக்க வேண்டும் என்பது முக்கியம். ஐபிஎல் 8 சில தரமான போட்டிகளைக் கொண்டிருந்தது. கடைசி வரை பிளே ஆஃப் சுற்றுக்கு எந்த அணி தகுதி பெறும் என்பது ஆர்வமூட்டக்கூடியதாகவே அமைந்தது. இன்றைக்குத் தேவை தரமான கிரிக்கெட் ஆட்டமே” என்றார் லஷ்மண்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x