போர்டு பிரசிடென்ட் லெவன் அணியுடன் தென் ஆப்பிரிக்கா மோதும் 3 நாள் கிரிக்கெட் போட்டி: விஜயநகரத்தில் இன்று தொடக்கம்

போர்டு பிரசிடென்ட் லெவன் அணியுடன் தென் ஆப்பிரிக்கா மோதும் 3 நாள் கிரிக்கெட் போட்டி: விஜயநகரத்தில் இன்று தொடக்கம்
Updated on
2 min read

விஜயநகரம்

தென் ஆப்பிரிக்கா, போர்டு பிரசிடென்ட் லெவன் அணிகள் மோதும் 3 நாள் கிரிக் கெட் போட்டி இன்று விஜயநகரத்தில் தொடங்கவுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி டி20, 3 நாள் போட்டி, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து 3 நாள் போட்டி இன்று தொடங்கவுள்ளது. இதைத் தொடர்ந்து 3 கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறும்.

ஆந்திர மாநிலம் விஜயநகரத்திலுள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்த 3 நாள் போட்டி நடைபெறவுள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்கும், போர்டு பிரசிடென்ட் லெவன் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்களும் இது ஒரு நல்ல பயிற்சி ஆட்டமாக அமையும். ரோஹித் சர்மா தலைமையில் போர்டு பிரசி டென்ட் லெவன் அணி களம் காண்கிறது.

குறிப்பாக இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மாவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. டெஸ்ட் போட்டி களில் சமீப காலமாக சிறப்பாக பரிமளிக்காத நிலையில் இந்த போட்டியை அவர் நன்கு பயன் படுத்திக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் போர்டு பிரசிடென்ட் லெவன் அணியில் மயங்க் அகர்வால், கருண் நாயகர், பிரியங்க் பஞ்சால், ஏ.ஆர்.ஈஸ்வரன், சித்தேஷ் லாட் ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர். பவுலிங்கில் ஷர்துல் தாக்குர், உமேஷ் யாதவ், அவேஷ் கான் ஆகியோர் தென் ஆப்பிரிக்க அணியை அச்சுறுத்துவர் என எதிர்பார்க்கலாம்.

மாறாக சர்வதேச டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்குகிறது. அந்த அணியின் டெஸ்ட் கேப்டன் பாப் டூ பிளெசிஸ் தலைமையில் அணி களம் காண்கிறது. பேட்டிங்கில் டூ பிளெசிஸ், குயின்டன் டி காக், டீன் எல்கர், எய்டன் மார்கிராம் ஆகியோர் இந்தப் போட்டியில் அதிக அளவு ரன் குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைப் போலவே பவுலிங்கில் அந்த அணி லுங்கி நிகிடி, வெர்னான் பிலாண்டர், காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்டே ஆகியோர் போர்டு பிரசிடென்ட் லெவன் அணி வீரர்களை அச்சுறுத்தக் காத்திருக்கின்றனர்.

அணி விவரம்:

போர்டு பிரசிடென்ட் லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), மயங்க் அகர்வால், பிரியங்க் பஞ்சால், ஏ.ஆர்.ஈஸ்வரன், கருண் நாயர், சித்தேஷ் லாட், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), ஜலஜ் சக்சேனா, தர்மேந்திரசின் ஜடேஜா, அவேஷ் கான், இஷான் போரல், ஷர்துல் தாக்குர், உமேஷ் யாதவ்.

தென் ஆப்பிரிக்கா: பாப் டூ பிளெசிஸ் (கேப்டன்), டெம்பா பவுமா (துணை கேப்டன்), தெனிஸ் டி புருயின், குயின்டன் டி காக், டீன் எல்கர், ஜுபாயர் ஹம்சா, கேசவ் மகராஜ், எய்டன் மார்கிராம், சேனுரன் முத்துசாமி, லுங்கி நிகிடி, அன்ரிச் நோர்ட்டே, வெர்னான் பிலாண்டர், டேட் பயட், காகிசோ ரபாடா, ரூடி செகன்ட். - பிடிஐ

நேரம்: காலை 9.30.

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in