Published : 25 Sep 2019 09:34 PM
Last Updated : 25 Sep 2019 09:34 PM

சரிந்த தமிழக அணியை தூக்கி நிறுத்திய கேப்டன் தினேஷ் கார்த்திக் : விஜய் ஹசாரே ட்ராபியில் அபார வெற்றி

ஜெய்ப்பூரில் நடைபெற்ற விஜய் ஹசாரே ஒருநாள் போட்டியில் தமிழக அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் அபாரமாக ஆடியதன் விளைவாக சர்வீசஸ் அணியை 212 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது.

குரூப் சி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழ்நாடு அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 294 ரன்களை எடுக்க, தொடர்ந்து ஆடிய சர்வீசஸ் அணி 82 ரன்களுக்குச் சுருண்டது.

முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்திய பிறகு விஜய் ஹசாரே டிராபியில் இன்று இரண்டாவது வெற்றியைப் பெற்றுள்ளது தமிழ்நாடு அணி.

டாஸ் வென்ற சர்வீசஸ் அணி தமிழ்நாடு அணியை முதலில் பேட் செய்ய அழைத்தது, தினேஷ் கார்த்திக் அதிகபட்சமாக 95 ரன்களை எடுத்தார்.

கார்த்திக்கிற்கு சி. ஹரிஷ் நிஷாந்த் (71 பந்துகளில் 73 ரன்கள்) நல்ல ஆதரவு கொடுத்தார். முன்னதாக அபினவ் முகுந்த் உட்பட முன் வரிசை வீரர்கள் சொதப்ப தமிழ்நாடு அணி 4 விக்கெட்டுகளை 55 ரன்களுக்கு இழந்து தட்டுத் தடுமாறியது.

அப்போது தினேஷ் கார்த்திக், நிஷாநாத் கூட்டணி அமைத்தனர் தினேஷ் கார்த்திக் 91 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 95 ரன்களை எடுக்க, நிஷாந்த் தன் 73 ரன்களில் 7 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்தார். இருவரும் சேர்ந்து 144 ரன்களைச் சேர்த்தனர்.

பிறகு நம்பர் 10 வீரர் எம்.மொகமது 15 பந்துகளில் 36 ரன்கள் விளாசித்தள்ளினார், இதில் 4 சிக்சர்கள் அடங்கும். இதனையடுத்து தமிழ்நாடு அணி 300 ரன்களுக்கு அருகில் வந்தது.

294 ரன்கள் எட்டியதை அடுத்து தன்னம்பிக்கையுடன் வீசிய தமிழ்நாடு பவுலர்கள் சர்விசஸ் வீரர் ஒருவரையும் செட்டில் ஆகவிடவில்லை. கே.விக்னேஷ் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். எம்.மொகமட் 10 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தமிழ்நாடு அணிக்கு 4 புள்ளிகள் கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x