ஐசிசி டி20 தரவரிசை: ரோஹித் முன்னேற்றம், டாப்10 வரிசையை நோக்கி கோலி, தவண்

ரோஹித் சர்மா, விராட் கோலி : கோப்புப்படம்
ரோஹித் சர்மா, விராட் கோலி : கோப்புப்படம்
Updated on
1 min read

துபாய்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டி20 தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்தியாவின் ரோஹித் சர்மா 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, ஷிகர் தவண் ஆகியோர் டாப்-10 பட்டியலை நெருங்கியுள்ளார்கள்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி மோதியது. இதில் ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. மற்ற இரு போட்டிகளிலும் இந்தியா, தென் ஆப்பிரிக்கா தலா ஒரு போட்டியில் வென்றது.

இதில் 2-வது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 72 ரன்கள் சேர்த்தார். இதனால் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 11-வது இடத்துக்கும் தவண் 3 இடங்கள் முன்னேறி 13-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

ரோஹித் சர்மா 664 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். இவர் 8-வது இடத்தை இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸுடன் பகிர்ந்துள்ளார்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் வாஷிங்டன் சுந்தர் 8 இடங்கள் முன்னேறி, 50-வது இடத்தில் உள்ளார்.

வங்கதேசம், ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடைடேயே முத்தரப்பு டி20 போட்டி நடந்தது. அதேபோல் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து இடையே டி20 முத்தரப்பு தொடரும் நடந்தது.

இதில் ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரத்துல்லா ஜஜாய், ஸ்காட்லாந்தின் ஜார்ஜ் முன்சே ஆகியோர் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர். இதில் ஹஸ்ரத்துல்லா ஜஜாய் 727 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார். ஸ்காட்லாந்து வீரர் ஜார்ஜ் 21-வது இடத்தில் உள்ளார்.

தென் ஆப்பிரிக்க கேப்டன் குயின்டன் டீ காக் 49-வது இடத்தில் இருந்து 30-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக இருபோட்டிகளிலும் 52, 79 ரன்களை டீ காக் சேர்த்ததால் இந்த முன்னேற்றம் அடைந்துள்ளார். தர வரிசையில் இவர் அடையும் உயரிய இடமாகும்.

இதேபோல தென் ஆப்பிரிக்க வீரர் தப்ரிஸ் ஷாம்சி டாப் 20 பந்துவீச்சாளர்களி்ல முதல் முறையாக நுழைந்துள்ளார், அன்டில் பெகுல்குவாயே 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதேபோல ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் முஜிப் ஜாத்ரன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி டாப் 10 வரிசையில் 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஐஏஎன்எஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in