

புதன்கிழமை சென்னையில் தொடங்கும் இந்தியா, ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான 2-வது 4 நாள் போட்டியில் விராட் கோலி ஆடப்போவதை முன்னிட்டு இந்த போட்டி குறித்து ஒரு புது உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய ஏ வீரர்கள் இந்த புதிய சவாலை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா ஏ அணியின் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் கூறும்போது, “அவரது வருகை உண்மையில் எங்களுக்கு ஒரு நல்ல சவால். இங்கு வருவதே சிறந்த வீரர்களுக்கு எதிராக ஆடவேண்டும் என்ற நோக்கத்தினால்தான், எனவே, கோலி விளையாடுகிறார் என்பது உண்மையில் எங்களுக்கு உற்சாகம் ஏற்படுத்துகிறது” என்றார்.
இலங்கைக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறும் தொடருக்காக பேட்டிங் பயிற்சி எடுத்துக் கொள்ள விராட் கோலி இந்தப் போட்டியில் ஆடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.