Published : 23 Sep 2019 08:34 PM
Last Updated : 23 Sep 2019 08:34 PM

ஜானி பேர்ஸ்டோவை டெஸ்ட் அணியிலிருந்து நீக்கி இங்கிலாந்து அதிரடி

லண்டன், ஐ.ஏ.என்.எஸ்.

உலகக்கோப்பையை வெல்ல காரணமாக அமைந்த இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவை நியூஸிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கி அதிரடி முடிவை எடுத்துள்ளது இங்கிலாந்து.

இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் பேர்ஸ்டோவின் சராசரி 20.25, ஆஷஸ் சராசரி 19.45. இதனையடுத்து ஜோஸ் பட்லரை விக்கெட் கீப்பராகத் தேர்வு செய்தது இங்கிலாந்து அணி. அதே போல் நன்றாக ஆடி வந்த மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் பென் ஃபோக்ஸுக்கும் நியூஸிலாந்து தொடரில் இங்கிலாந்து இடமளிக்கவில்லை.

அதே போல் ஜேம்ஸ் ஆண்டர்சன் நியூஸிலாந்து தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்திருந்தார், ஆனால் அவரையும் தேர்வு செய்யாமல் அவரது லங்காஷயர் சகாவான வேகப்பந்து வீச்சாள்ர் சாகிப் மஹ்மூதைத் தேர்வு செய்துள்ளனர்.

அதே போல் பரிசோதனை முயற்சியாக டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்ட ஜேசன் ராய் தொடக்க வீரராகவும் நடுவரிசை வீரராகவும் சொதப்பியதால் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதே போல் ஜாக் லீச் ஸ்பின்னராகத் தேர்வு செய்யப்பட, மொயின் அலிக்கு மீண்டும் வாய்ப்பில்லாமல் போயுள்ளது.

டி20 தொடருக்கான புதுமுகங்கள் கொண்ட இங்கிலாந்து அணியில் சோமர்செட் தொடக்க வீரர் சாம் பாண்ட்டன், மற்றும் ஸ்லோ பந்து ஸ்பெஷலிஸ்ட் ஆன பாட் பிரவுன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நவம்பர், டிசம்பரில் 2 டெஸ்ட்கள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து ஆடுகிறது.

டெஸ்ட் அணி: ஜோ ரூட், ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஸாக் கிராலி, சாம் கரண், ஜோ டென்லி, ஜாக் லீச், சாகிப் மஹ்மூத், மாட் பார்கின்சன், ஓலி போப், டோமினிக் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.

டி20 அணி: இயான் மோர்கன், ஜானி பேர்ஸ்டோ, டாம் பாண்ட்டன், சாம் பில்லிங்ஸ், பாட் பிரவுன், சாம் கரண், டாம் கரன், ஜோ டென்லி, லூயிஸ் கிரிகரி, கிரிஸ் ஜோர்டான், சாகிப் மஹ்மூத், டேவிட் மலான், மேட் பார்கின்சன், ஆதில் ரஷீத், ஜேம்ஸ் வின்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x