சீன ஓபன் பாட்மிண்டன்- பட்டம் வென்றார் கரோலினா

சீன ஓபன் பாட்மிண்டன்- பட்டம் வென்றார் கரோலினா
Updated on
1 min read

சாங்ஸோவ்

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற் றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டிகள் சீனாவின் சாங்ஸோவ் நகரில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கரோலினா மரின், சீன-தைபேயைச் சேர்ந்த தாய் ஜு யிங் ஆகியோர் மோதினர்.

இதில் கரோலினா மரின் 14-21, 21-17, 21-18 என்ற செட் கணக்கில் தாய் ஜு யிங்கை வீழ்த்தினார். முதல் செட்டை தாய் ஜு யிங் சிறப்பாக விளையாடி 21-14 என எளிதில் வென்றார். ஆனால் 2-வது சுற்றில் சுதாரித்துக் கொண்ட கரோலினா தொடர்ந்து புள்ளிகளைக் குவித்து வெற்றியைப் பெற்றார். 8 மாதங்களாக காயத்தால் விளையாடாமல் இருந்த, கரோலினா மரின் சமீபத்தில்தான் சர்வதேச போட்டிகளுக்குத் திரும்பினார். காயத்தில் இருந்து மீண்டபிறகு அவர் விளையாடிய 2-வது தொடர் இது வாகும். பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in