Published : 21 Sep 2019 03:50 PM
Last Updated : 21 Sep 2019 03:50 PM

எல்லாம் தவறாகச் சென்றுவிட்டது: இந்தியாவுக்கான விமானத்தை தவறவிட்ட டூப்பிளசிஸ் 

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக, இந்தியா வருவதற்காகத் தான் மேற்கொண்ட விமானப் பயணம் மோசமான அனுபவத்தைத் தந்ததாக தென் ஆப்பிரிக்க வீரர் டூப்பிளசிஸ் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 20 - 20 போட்டிகளில் விளையாடி வருகின்றன. இதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் அக்டோபர் மாதத்திலிருந்து நடைபெறவுள்ளன. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டன் டூப்பிளசிஸ் 4 மணிநேரம் தாமதமாக வந்த பிரிட்டீஷ் விமானத்தால் இந்தியா வருவதற்கான இணைப்பு விமானத்தைத் தவறவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டூப்பிளசிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ 4 மணிநேர தாமதத்திற்குப் பிறகு துபாய் செல்வதற்கான விமானத்தில் இருக்கிறேன். தற்போது நான் இந்தியா செல்லும் விமானத்தைத் தவறவிடப் போகிறேன். அடுத்த விமானம் 10 மணிநேரத்துக்குப் பிறகுதான்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் டூப்பிளசிஸ் நேற்றிரவு இந்தியா செல்லும் விமானத்தைத் தவறவிட்டார்.

மேலும் 9 மணிநேரத்துக்குப் பிறகு, ''எனது கிரிக்கெட் பேக் இன்னும் இதுவரை வரவில்லை. இது எனது விமானப் பயணங்களில் மோசமான அனுபவம். எல்லாமே தவறாகச் சென்றுவிட்டது'' என்று டூப்ப்ளசிஸ் பதிவிட்டிருந்தார்.

டூப்பிளசிஸின் விமர்சனத்துக்கு பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கோரியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x