

நூர்-சுல்தான்
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கம் வென் றார். சுஷில் குமார் முதல் சுற்றுடன் வெளியேறினார்.
கஜகஸ்தானின் நூர்-சுல்தான் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் பஜ்ரங் புனியா 8-7 என்ற கணக்கில் மங்கோலியாவின் டோமர் துல்காவை வீழ்த்தினார். உலக சாம்பியன்ஷிப் தொடரில் பஜ்ரங் புனியா பதக்கம் வெல்வது இது 3-வது முறையாகும்.
2013-ல் வெண்கலப் பதக்கத்தை யும், 2018-ல் வெள்ளிப் பதக்கத் தையும் பஜ்ரங் புனியா கைப்பற்றி யிருந்தார். இம்முறை அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் பஜ்ரங் புனியா, அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.
74 கிலோ எடைப் பிரிவு முதல் சுற்றில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் சுஷில் குமார், அஜர் பைஜானின் காட்ஜிமுராட் காட்ஜி யேவை எதிர்த்து விளையாடினார். இதில் சுஷில் குமார் 9-4 என்ற கணக்கில் வலுவான முன்னிலையில் இருந்தார்.
ஆனால் அதன் பின்னர் தொடர்ச் சியாக 7 புள்ளிகளை குவித்து அதிர்ச்சி கொடுத்தார் காட்ஜிமுராட். முடிவில் காட்ஜிமுராட் 11-9 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். தொடர்ந்து காட்ஜிமுராட் கால் இறுதி சுற்றில் 1-8 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஜோர்டான் பரோஸிடம் தோல்வியடைந்தார். இதனால் சுஷில் குமார் ரெப்பேஜ் சுற்றில் விளையாடும் வாய்ப்பை யும், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்தார். சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப்பில் களமிறங் கிய சுஷில் குமார் முதல் சுற்றுடன் வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.