Last Updated : 25 Jul, 2015 08:54 PM

 

Published : 25 Jul 2015 08:54 PM
Last Updated : 25 Jul 2015 08:54 PM

வர்த்தக மதிப்பு வாய்ந்த விளையாட்டு நட்சத்திரங்கள் பட்டியல்: தோனிக்கு 9-வது இடம்

சர்வதேச அளவில் வர்த்தக மதிப்பு வாய்ந்த விளையாட்டு நட்சத்திரங்கள் பட்டியலில் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி 9-வது இடத்தைப் பிடித்துள்ளார். பிரபல கால்பந்து வீரரான லயோனல் மெஸ்ஸி, பிரபல தடகள வீரரான உசேன் போல்ட் உள்ளிட்டோரைவிட முன்னிலையில் உள்ளார் தோனி.

லண்டனைச் சேர்ந்த லண்டன் ஸ்கூல் ஆஃப் மார்க்கெட்டிங் நிறுவனம், வர்த்தக மதிப்புமிக்க 20 விளையாட்டு நட்சத்திரங்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வீரர்களின் பிரான்ட் மதிப்பு, ஸ்பான்சர்ஷிப் மூலமாக அவர்களுக்கு கிடைக்கும் வருமானம், ஒட்டுமொத்த வருமானத்தின் சதவீதம், சமூக வலைதளங்களில் வீரர்கள் பெற்றுள்ள பிரபலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

ரோஜர் ஃபெடரர் முதலிடம்

ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் முதலிடத்திலும், அமெரிக்காவைச் சேர்ந்த கோல்ஃப் சாம்பியன்களான டைகர் உட்ஸ், பில் மைக்கேல்சன் ஆகியோர் முறையே 2 மற்றும் 3-வது இடங்களிலும் உள்ளனர்.

விம்பிள்டன் இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்தாலும்கூட, உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார் ரோஜர் ஃபெடரர்.

இது தொடர்பாக லண்டன் ஸ்கூல் ஆஃப் மார்க்கெட்டிங் நிறுவனத்தைச் சேர்ந்த ஜாக்ஸ் டி காக் கூறுகையில், “ஃபெடரர் இந்த ஆண்டு விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வெல்லாமல் போயிருக்கலாம். ஆனால் அவருடைய தனிப்பட்ட குணாதிசயங்கள் அனைவரையும் ஈர்ப்பதை ஸ்பான்சர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

நாங்கள் வெளியிட்டுள்ள பட்டியலில் டென்னிஸ் வீரர்கள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான ஜோகோவிச் 7-வது இடத்திலும், ஸ்பெயினின் ரஃபேல் நடால் 8-வது இடத்திலும் உள்ளனர்.

ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா 12-வது இடத்திலும், உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 20- வது இடத்திலும் உள்ளனர். ரோஜர் ஃபெடரர், டைகர் உட்ஸ், மைக்கேல்சன் ஆகியோர் தங்களின் உச்சகட்ட பார்மை கடந்து வந்திருந்தாலும்கூட, தாங்கள் சார்ந்த விளையாட்டுகளில் ராஜாக்களாகத் திகழ்கின்றனர்” என்றார்.

டாப்-20 நட்சத்திரங்களின் பட்டியல்

1 ரோஜர் ஃபெடரர் ஸ்விட்சர்லாந்து டென்னிஸ்

2 டைகர் உட்ஸ் அமெரிக்கா கோல்ஃப்

3 பில் மைக்கேல்சன் அமெரிக்கா கோல்ஃப்

4 லெப்ராம் ஜேம்ஸ் அமெரிக்கா கூடைப்பந்து

5 கேவின் துரந்த் அமெரிக்கா கூடைப்பந்து

6 ரோரி மெக்கில்ராய் வடக்கு அயர்லாந்து கோல்ஃப்

7 நோவக் ஜோகோவிச் செர்பியா டென்னிஸ்

8 ரஃபேல் நடால் ஸ்பெயின் டென்னிஸ்

9 மகேந்திர சிங் தோனி இந்தியா கிரிக்கெட்

10 கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்ச்சுகல் கால்பந்து

11 கோபே பிரையன்ட் அமெரிக்கா கூடைப்பந்து

12 மரியா ஷரபோவா ரஷ்யா டென்னிஸ்

13 லயோனல் மெஸ்ஸி அர்ஜெண்டினா கால்பந்து

14 உசேன் போல்ட் ஜமைக்கா தடகளம்

15 நெய்மர் பிரேசில் கால்பந்து

16 ஆன்டி முர்ரே பிரிட்டன் டென்னிஸ்

17 கெய் நிஷிகோரி ஜப்பான் டென்னிஸ்

18 டெரிக் ரோஸ் அமெரிக்கா கூடைப்பந்து

19 ஃப்ளாய்ட் மேவெதர் அமெரிக்கா குத்துச்சண்டை

20 செரீனா வில்லியம்ஸ் அமெரிக்கா டென்னிஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x