

நூர்-சுல்தான்
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகட் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் கஜகஸ்தானின் நூர்-சுல்தான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஃப்ரீஸ்டைல் 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகட் 2-வது சுற்றில் நடப்பு சாம்பி யனான ஜப்பானின் மயூ முகைதா விடம் 0-7 என்ற கணக்கில் தோல்வி யடைந்தார். எனினும் மயூ முகைதா இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் வினேஷ் போகட் ரெப்பேஜ் சுற்றில் விளையாட தகுதி பெற்றார்.
வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் நுழைவதற்கான இந்த சுற்றின் முதல் ஆட்டத்தில் வினேஷ் போகட் 5-0 என்ற கணக்கில் எந்தவித சிரமமும் இல்லாமல் உக்ரைனின் யூலியா கால் வாட் ஸியை வீழ்த்தினார். தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் சாரா ஹில்டெபிராண்டுடன் மோதி னார் வினேஷ் போகட்.
இதில் தடுப்பாட்டத்தில் வலுவாக திகழ்ந்த வினேஷ் போகட், சாராவை ஆதிக்கம் செலுத்த விடாமல் கட்டுக்குள் வைத்தபடி சரியான தருணத்தில் புள்ளிகளையும் குவித்தார்.
இதனால் 8-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார் வினேஷ் போகட். இந்த வெற்றியால் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் விளையாட தகுதி பெற்றார் வினேஷ் போகட்.
வெண்கலப் பதக்க சுற்றில் நுழைந்ததன் மூலம் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் வினேஷ் போகட். இதன் மூலம் இம்முறை மல்யுத்தத்தில் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற் றார் வினேஷ் போகட். வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் வினேஷ் போகட், கிரீஸ் நாட்டின மரியா ப்ரிவோலராகியுடன் மோதி னார். இதில் வினேஷ் போகட் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
50 கிலோ எடைப் பிரிவில் ரெப்பேஜ் சுற்றுக்கு விளையாட தகுதி பெற்றிருந்த இந்தியாவின் சீமா பிஸ்லா முதல் ஆட்டத்தில் நைஜீரியாவின் மெர்சி ஜெனி ஸிஸை வென்றார். தொடர்ந்து நடைபெற்ற அடுத்த ஆட்டத்தில் 3-11 என்ற கணக்கில் ரஷ்யாவின் கேத்ரினா போலேஷ்சுக்கிடம் வீழ்ந்தார் சீமா பிஸ்லா.
59 கிலோஎடைப் பிரிவில் இந்தி யாவின் பூஜா தண்டா அரை இறுதி சுற்றில் ரஷ்யாவின் லியுபோவ் ஓவ்சரோவாவிடம் 0-10 என்ற கணக்கில்அதிர்ச்சி தோல்வி யடைந்தார். அரை இறுதியில் தோல்வியடைந்த பூஜா தண்டா வெண்கலப் பதக்கத்துக் கான சுற்றில் பங்கேற்கிறார்.