Published : 18 Sep 2019 01:36 PM
Last Updated : 18 Sep 2019 01:36 PM

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை சுற்றி எழுந்த சர்ச்சை என்ன? குடும்பத்தில் நிகழ்ந்த கொடூரத்தை வெளியிட்ட நாளேடு மீது ஆவேசம்

லண்டன்

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனது குடும்பத்தில் நிகழ்ந்த சோகமான, கொடூர சம்பவத்தை வெளியிட்ட 'தி சன்' நாளேடு மீது கடும் கோபமும், அதிருப்தியும் அடைந்துள்ளார்

தி சன் நாளேடு வெளியிட்ட செய்தியால் மனவேதனை அடைந்ததாகவும், இதுமோசமான பத்திரிகை கலாச்சாரம் என்றும் பென் ஸ்டோக்ஸ் தனது ட்வி்ட்டர் பக்கத்தில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

பென் ஸ்டோக்ஸின் பூர்வீகம் நியூஸிலாந்து. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் நியூஸிலாந்தில் நடந்த கொடூரமான சோகத்தால் அங்கிருந்து இங்கிலாந்து குடிபெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அந்த சம்பவத்தை இங்கிலாந்தில் உள்ள 'தி சன்' நாளேடு துப்புறிந்து அந்த கதையையும், படங்களையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

இந்த செய்தியை 'தி சன்' நாளேட்டில் பார்த்த பென் ஸ்டோக்ஸ் மிகுந்த ஆவேசமும், அதிருப்தியும் அடைந்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பென் ஸ்டோக்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
31 ஆண்டுகளுக்கு முன் எனது தனிப்பட்ட குடும்பத்தில் நிகழ்ந்த சோகமான, வேதனைதரக் கூடிய கதையையும், விவரங்களையும் தி சன் நாளேடு வெளியிட்டுள்ளது. இப்படி ஒரு மோசமான, மட்டமான, பத்திரிகை கலாச்சாரத்தை குறித்து பேசுவதற்கு எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த கொடூரமான மறக்க வேண்டிய சம்பவத்தை கடக்க நாங்கள் கடுமையாக பணியாற்றி இருக்கிறோம். இது ஆழ்ந்த வேதனை தரக்கூடிய சம்பவம்.

ஆனால் தி சன் நாளேடு ஒரு நிருபரை நியூஸிலாந்துக்கு அனுப்பி, எனது தாயாரின் குடும்பத்தாரிடம் பேசி அந்த விவரங்களை கேட்டு வெளியிட்டது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

என்னுடைய வாழ்க்கையில் நடந்த, குடும்பத்தை பாதித்த மோசமான, சோகச் செய்தியை வெளியிட்ட தி சன் நாளேட்டின் செயல் இதைத்தவிர மோசமானதாக இருக்க முடியாது

இந்த விவரங்களை வெளியிட்டதால், என் தாய்க்கு வாழ்நாள் நாள் முழுவதும் பாதிப்பையும், பல்வேறு விளைவுகளையும் ஏற்படுத்தும். என்னுடைய பெயரைப் பயன்படுத்தி மன்னிப்புக் கேட்டு எனது பெற்றோரின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளியிடுவது எனது பெற்றோரை கடுமையாக பாதித்துள்ளது.

ஆனால் என்னுடைய பெயரைப் பயன்படுத்தி, எனது பெற்றோர், எனது மனைவி, குழந்தைகள், குடும்ப உறுப்பினர்கள் உரிமைகள் பறிக்கப்படுவதை நான் அனுமதிக்கமாட்டேன். அவர்களுக்கான தனிப்பட்ட உரிமையை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.

இதில் செய்தியில் உள்ள பலவிவரங்கள் உண்மைக்கு மாறானவேயாக இருக்கின்றன. இதை நாம் தீவிரமாக எடுததுக்கொண்டு, இந்த கட்டுரையை பிரசுரிக்க எவ்வாறு நாம் அனுமதிப்பது என்ற கேள்வியை வைக்கிறேன். எனது குடும்பம் குறித்த விவரங்கள் பொதுப்படையாக வெளியாகிவிட்டதால், எனது குடும்பத்தாரின் தனிப்பட்ட உரிமைகளை, வாழ்க்கையை மதிக்க வேண்டும்
இவ்வாறு ஸ்டோக்ஸ் அதில் தெரிவித்துள்ளார்.

ஸ்டோக்ஸ் மனம் வேதனைப்பட்டு எழுதிய கடிதத்தைப் பார்த்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஆதரவு அளித்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் டாம் ஹாரிஸன் கூறுகையில் " பென் ஸ்டோக்ஸ்க்கு நாங்களும், இந்த நாடும் முழுமையாக ஆதரவாக இருப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தி சன் நாளேட்டின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், " தி சன் நாளேடு பென் ஸ்டோக்ஸ் மீது அதிக அன்பும் மரியாதையும் வைத்துள்ளது. அவரின் திறமைகளை தொடர்ந்து பாராட்டி புகழ்ந்து வருகிறது. இந்த செய்தியை பிரசுரிக்கும் முன்பு அவரின் பிரதிநிதியிடமும், குடும்பத்தாரிடம் கேட்டபோது அவர்கள் பிரசுரிக்க வேண்டாம் என்று கூறவில்லை" எனத் தெரிவித்தார்.

நடந்தது என்ன?

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் நியூஸிலாந்தில் பென் ஸ்டோக்ஸ் தாய்க்கு நடந்த சம்பவம். பென் ஸ்டோக்ஸின் தாய்க்கு ஸ்டோக்ஸ் 2-வது கணவரின் குழந்தை. முதல் கணவருக்கு ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் இருந்தது. அவரை விவாகரத்து செய்துவிட்டு ஸ்டோக்ஸ் தாய் 2-வது திருமணம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த முதல் கணவர் தனது இரு குழந்தைகளையும் சுட்டுக்கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். இந்தசம்பவத்துக்குப்பின் நியூஸிலாந்தில் இருந்து ஸ்டோக் குடும்பத்தினர் இங்கிலாந்து வந்தனர். இந்த சம்பவம் நடந்து 3ஆண்டுகளுக்கிப்பின்புதான் ஸ்டோக்ஸ் பிறந்தார். இந்த கதை குறித்த முழுமையான விவரங்களை தி சன் நாளேடு வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x