Published : 18 Sep 2019 11:45 AM
Last Updated : 18 Sep 2019 11:45 AM

மொஹாலியில் இன்று 2-வது டி 20-ல் இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதல்: நெருக்கடியில் களமிறங்குகிறார் ரிஷப் பந்த்

மொஹாலி 

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டி 20 ஆட்டம் மொஹாலியில் இன்று நடைபெறுகிறது.

இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் தரம்சாலாவில் நடைபெற இருந்த முதல் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்நிலையில் 2-வது ஆட்டம் பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான ஐ.எஸ்.பிந்த்ரா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்தத் தொடரானது அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ் திரேலியாவில் நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பையை நோக் கிய பயணமாகவே கருதப்படு கிறது. இதை கருத்தில் கொண்டே இந்திய அணியில் இளம் வீரர்க ளுக்கு அதிகளவில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. கேப் டன் விராட் கோலி ஏற்கெனவே அணியின் திட்டங்கள் மற்றும் இளம் வீரர்களிடம் எதிர்பார்க்கும் திறன் களை தெளிவாக விளக்கியுள்ளார்.

மேலும் குறுகிய காலக்கட்டத் தில் கிடைக்கும் வாய்ப்புகளை இளம் வீரர்கள் சரியாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என வும் அறிவுறுத்தியுள்ளார். இவர் களில் முக்கியமான வீரராக ரிஷப் பந்த் உள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு தொடக்கத்திலேயே அவர், அணிக் குள் கொண்டுவரப்பட்டு விட்டதால் இனிமேலும் அவரை இளம் வீரர் என்ற அடைமொழிக்குள் அடைக்க முடியாது.

21 வயதான ரிஷப் பந்த் களமிறங் கிய உடனே தனது விக்கெட்டை எளி தான ஷாட் விளையாடி தாரை வார்ப் பது பெரிய பலவீனமாக உள்ளது. இதை பயிற்சியாளர் ரவி சாஸ் திரி சமீபகாலமாக வெளிப்படை யாகவே சுட்டிக் காட்டி வருகிறார். இது ஒருபுறம் இருக்க தோனியை டி 20 வடிவில் மீண்டும் கொண்டுவர விராட் கோலி விருப்பமாக உள்ளதும் ரிஷப் பந்த்தின் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு கடந்த இரு தினங்களாக ரிஷப் பந்த், தீவிர வலை பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். சுழற்பந்து வீச் சாளர்களான ராகுல் சாஹர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் உயர்மட்ட செயல் திறனை வெளிப் படுத்த வேண்டிய கட்டத்தில் உள் ளனர். ஏனெனில் இவர்கள் இரு வரும் குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோருக்கு மாற்றாக தொடர்ந்து 2-வது தொடரில் களமிறங்க உள்ளனர்.

டி 20 உலகக் கோப்பை தொட ருக்கு முன்னதாக சுமார் 25 டி 20 ஆட்டங்களில் மட்டுமே இந்திய அணி கலந்து கொள்ள உள்ளது. எனவே அதற்கு முன்னதாக பின் கள வரிசை பேட்டிங்கை பலப் படுத்த இந்திய அணி நிர்வாகம் விரும்புகிறது. இதன்படி 8, 9 மற்றும் 10-வது வரிசையில் களமிறங்கும் வீரர்கள் கூட சீராக ரன்கள் சேர்க்க வேண் டும் என திட்டமிடப்பட்டு வருகிறது. ஏனெனில் இந்த வரிசையில் களமிறங் கும் இந்திய வீரர்களி டம் இருந்து இதுவரை பேட்டிங்கில் பெரிய அளவில் பங்களிப்பு வெளிப்பட்டது இல்லை.

ஆழமான பேட்டிங் வரிசையில் கவனம் செலுத்தும் அதேவேளையில் நடுஓவர்களில் விக்கெட்கள் வீழ்த்தும் திறனில் இந்திய அணி நிர்வாகம் தேக்கம் அடைந்துவிடுமோ? என்ற ஐயமும் எழாமல் இல்லை. ஆனால் இவற்றுக்கு இந்திய அணி மேற்கொண்டுள்ள பரிசோதனை முயற்சிகளும், காலமும்தான் விடை அளிக்க முடியும்.

இந்தத் தொடரானது நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்துவதற் காக அணிக்குள் கொண்டுவரப் பட்டுள்ள ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே ஆகியோருக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேவேளையில் மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் தனது தரநிலைக்கு தகுந்தபடி விளையாடாத தொடக்க வீரரான ஷிகர் தவண், கணிசமான அளவிலான ரன்கள் சேர்ப்பதற்கு ஒரு வாய்ப்பாகவும் இந்தத் தொடர் பார்க்கப்படுகிறது.

இதே மைதானத்தில்தான் ஷிகர் தவண் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 187 ரன்கள் விளாசினார். மேலும் கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 143 ரன்கள் சேர்த்திருந்தார். இதேபோன்ற வகையிலான உயர் மட்ட செயல்திறனை வெளிப்படுத்து வதில் ஷிகர் தவண் முனைப்பு காட்டக்கூடும்.

குயிண்டன் டி காக் தலைமை யிலான இளம் வீரர்களை கொண்ட தென் ஆப்பிரிக்க அணி மாற்றத்துக்கான காலக்கட்டத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள் ளது. பந்து வீச்சு துறையை வழி நடத்தும் காகிசோ ரபாடா, இந்திய பேட்ஸ்மேன்களை குறிப்பாக விராட் கோலியை பெரிய அளவில் ரன்கள் குவிக்கவிடாமல் கட்டுப் படுத்த வேண்டுமானால் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

விராட் கோலி கடைசியாக இந்த மைதானத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை டி 20 தொடரில் ஆஸ்தி ரேலிய அணிக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில் 51 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். இந்த ஆட்டத்தில் தோனியுடன் இணைந்து பார்ட்னர் ஷிப்பை சிறப்பாக கட்டமைத்திருந் தார் விராட் கோலி. இதனால் மீண் டும் அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, கிருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி.

தென் ஆப்பிரிக்கா: குயிண்டன் டி காக் (கேப் டன்), ராஸி வான் டெர் டசன், டெம்பா பவுமா, ஜூனியர் டலா, ஜோர்ன் ஃபோர்டுயின், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ரீஸா ஹென்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், அன்ரிச் நார்ட்ஜி, அன்டில் பெலுக் யாவோ, டுவைன் பிரிட்டோரியஸ், காகி சோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, ஜார்ஜ் லின்டே.

நேரம்: இரவு 7

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x