Published : 17 Sep 2019 08:25 AM
Last Updated : 17 Sep 2019 08:25 AM

டிஎன்பிஎல் டி 20 தொடரில் அடையாளம் தெரியாத நபர்கள் வீரர்களை அணுகினார்களா?

சென்னை

டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் நடைபெற்றதாக வெளியான தகவலைத் தொடர்ந்து போட்டியை நடத்தும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் 4-வது சீசன் ஆட்டங்கள் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இந் நிலையில் இந்தத் தொடரில் விளையாடிய சில வீரர்கள், அடையாளம் தெரியாத நபர்கள் சூதாட்டத்துக்கு இணங்குமாறு தங்களுக்கு வாட்ஸ்-அப் செயலியில் தகவல் அனுப்பியதாக பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு குழுவினரிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ ஊழல் தடுப்பு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பிசிசிஐ ஊழல் தடுப்பு குழுவின் தலைவர் அஜித் சிங் கூறுகையில், “அடையாளம் தெரியாத சிலரிடம் இருந்து தங்களுக்கு வாட்ஸ்-அப் பில் தகவல் வந்ததாக வீரர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இதை அனுப்பியவர்கள் யார்? என்பதை கண்டறிய முயற்சி செய்து வரு கிறோம்.” என்றார்.

டிஎன்பிஎல் நிர்வாகம் விளக்கம்

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக டிஎன்பிஎல் நிர்வாகக் குழு தலைவர் பி.எஸ்.ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

கடந்த ஜூலை மாதம் நடை பெற்ற டிஎன்பிஎல் தொடரில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் ஊடகங்கள் தொடர்பான செய்திகளுக்கு பதில ளிக்கும் வகையில் டிஎன்சிஏ இந்த தெளிவான அறிக்கையை வெளி யிட விரும்புகிறது. டிஎன்பிஎல் தொடங்கப்பட்ட 2016-ம் ஆண்டில் இருந்து ஐசிசி மற்றும் பிசிசிஐ விதிமுறைகளை மாதிரியாக கொண்டு ஊழல் தடுப்பு அதிகாரி கள் குழு அமைக்கப்பட்டு ஒவ் வொரு அணியையும், அதிகாரி களையும் கடுமையாக கண் காணித்து வருகிறார்கள்.

குறிப்பாக 2019-ம் ஆண்டு தொடரானது பிசிசிஐ-யின் திருத்தப் பட்ட ஊழல் தடுப்பு விதிகளின் கீழ் கொண்டுவரப்பட்டு பிசிசிஐ நியமித்த ஊழல் தடுப்பு அதிகாரி கள் தமிழகத்தில் நடைபெற்ற போட்டிகளை கண்காணித்தனர். துல்லியமான தகவல்கள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில், புகார் தொடர்பாக விசா ரணை நடத்தி அறிக்கை சமர்ப் பிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் விசாரணை குழு அமைக்கப் பட்டது. இந்த குழுவானது புகார் தொடர்பாக முழுமையாக ஆராய்ந்து அறிக்கை அளிக்க அவகாசம் தரும் வரை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் புகார் கூறப்படும் அணிகள், வீரர்கள், அதிகாரிகள் குறித்து எந்தவித அறிக்கையையும் வெளியிட முடியாத நிலை உள்ளது.

எவ்வாறாயினும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கிரிக்கெட் விளையாட்டின் அனைத்து பங்குதாரர் களுக்கும் ஒன்றை உறுதி அளிக்க விரும்புகிறது. அது, நியாயமற்ற நடைமுறைகளில் ஈடுபடும் எந்த வொரு நபர்களிடமும் சகிப்புத் தன்மையற்ற கொள்கையைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதுதான்.

கிரிக்கெட் விளையாட்டில் நியா மற்ற நடவடிக்கைகள் பொதுமக் களின் நம்பிக்கையைத் தகர்த்து விடும். எந்தவொரு நபரும் குற்றம் புரிந்தது கண்டறியப்பட்டால் அவர் மீது சட்டத்தின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதிப்படுத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x