Published : 15 Sep 2019 03:47 PM
Last Updated : 15 Sep 2019 03:47 PM

இங்கிலாந்து ஆதிக்கத்தில் உறுதியை இழந்த ஆஸி. : ஸ்டோக்ஸ், வேட், பெய்ன் இடையே வாய்த்தகராறு

தர்மசேனாவிடம் வாக்குவாதம் செய்யும் வேட்.

ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் பெரும்பாலும் இம்முறை பெரிய அளவில் வீரர்களிடையே ஸ்லெட்ஜிங் செய்திகள் இல்லாமல் நடைபெற்று வந்தது, ஆனால் இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலையுடன் ஆஸி.வெற்றி எல்லையைத் தாண்டி கொண்டு சென்று விட்டதால் வாய்திறவா அணியாக இருந்த ஆஸ்திரேலியா நிறைய வசைகளை உதிர்த்தது.

பென் ஸ்டோக்ஸ், ஜோ டென்லி 127 ரன்களைச் சேர்த்து உணவு இடைவேளை, தேநீர் இடைவேளைக்கு இடையே விக்கெட்டை கொடுக்காமல் ஆஸ்திரேலியாவை வெறுப்பேற்றியதோடு ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டனர்.

இந்நிலையில் பென் ஸ்டோக்சை வெறுப்பேற்றும் விதமாக அவர் 2017-ல் பிரிஸ்டல் விடுதி ஒன்றில் சண்டையிட்டு பெரிய அளவில் சர்ச்சையில் சிக்கி அணியிலிருந்து நீக்கப்பட்ட சந்தர்ப்பத்தை டேவிட் வார்னர் உள்ளிட்ட ஆஸி.வீரர்கள் கிளப்ப, டேவிட் வார்னரை ஒரு கெட்ட வார்த்தையைப் பயன்படுத்தி ஸ்டோக்ஸ் வர்ணித்தது ஸ்டம்ப் மைக்கில் கேட்டு விட்டது. இதனை பத்திரிகையாளர் இஸபெல் வெட்ஸ்பரி தன் சமூகவலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டார்.

மேத்யூ வேட் இந்தத் தொடர் முழுதும் களத்தில் ஏதாவது முணகியபடிதான் இருந்தார், ஆனால் நேற்று நடுவர் எராஸ்மஸ் தலையிட்டு பேசாமல் இருக்குமாறு வேடை வலியுறுத்த நேரிட்டது. ஸ்டோக்ஸ் 54 ரன்களில் இருந்த போது பெரிய எல்.பி. முறையீடு எழுந்தது, நடுவர் தர்மசேனா அது மட்டையில் பட்டதாக தெரிவிக்க ‘அப்போது அது ஒரு ஷாட் என்கிறீர்கள்’ என்று கூறியதோடு, 2வது இன்னிங்ஸில் என்ன செய்யப்போகிறார் தர்மசேனா என்பதற்கான முன் அறிகுறி என்பது போல் எதையோ கூறியுள்ளார்.

பால் டேம்பரிங் விவகாரத்துக்குப் பிறகே பெரிய ஸ்லெட்ஜிங்கெல்லாம் செய்யாமல் ஆஸ்திரேலிய அணி கட்டுக்கோப்புடன் ஆடி வந்தது, ஆனால் 18 ஆண்டுகளுக்குப் பிரகு ஆஷஸ் கோப்பையை இங்கிலாந்தில் வெல்லலாம் என்ற நிலையில் ஆட்டத்தை இங்கிலாந்து வெல்லும் நிலைக்கு இட்டுச் செல்ல ஆஸ்திரேலியா வெறுப்படைந்து மீண்டும் ஸ்லெட்ஜிங் பாதைக்கு வந்து தன் உறுதியிலிருந்தே விலகியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x