

திருவாரூர்
தேசிய வலு தூக்குதல் கூட் டமைப்பின் அங்கீகார கடிதம் கிடைக்காததால் கனடாவில் நடைபெற உள்ள காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் 60 பேர் பங்கேற்க முடியாமல் போயுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேரின் கனவுகளும் தகர்ந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி பாரதிதாசனின் மகன் கோவிந்தசாமி (23). பிளஸ் 2 வரை படித்துள்ள இவர், குடும்பச் சூழல் காரணமாக கட்டுமானத் தொழிலுக்குச் சென்றபடி மன்னார் குடியில் உள்ள ஒரு உடற் பயிற்சி நிறுவனத்தில் வலு தூக்கு தல் பயிற்சி பெற்றார். இதன் மூலம் மாநில, தேசிய போட்டிகளில் பங் கேற்றார். கடந்தாண்டு, 66 கிலோ எடைப் பிரிவில் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்றார்.
அதனடிப்படையில், 16-ம் தேதி (நாளை) தொடங்கி 21-ம் தேதி வரை கனடாவில் நடைபெறவுள்ள 13-வது காமன்வெல்த் வலு தூக்கு தல் சாம்பியன்ஷிப்பில் இந்தியா வின் சார்பில் பங்கேற்க தேர்வு செய் யப்பட்டார். இதையடுத்து கனடா செல்வதற்கு இந்திய வலு தூக்குதல் சங்கத்தை கோவிந்தசாமி அணு கினார். அப்போது தேசிய வலு தூக்குதல் சங்கம் இரண்டாக உடைந்ததால் அங்கீகார கடிதத்தை பெறமுடியாதநிலை நிலவுவதை அறிந்து மனமுடைந்தார்.
இந்த சிக்கலால் கோவிந்த சாமியுடன் சென்னையைச் சேர்ந்த ஆர்த்தி அருண், எஸ்.நவீன், சேலத்தைச் சேர்ந்த பிரியா, தஞ்சாவூரைச் சேர்ந்த பி.ரம்யா, திருச்சியைச் சேர்ந்த மணிமாறன், திருநெல்வேலியைச் சேர்ந்த உலக நாதன் உள்ளிட்ட 7 பேர் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த 53 வீரர் கள் என இந்தியா முழுவதும் 60 வீரர்களுக்கும் விசா கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக, தமிழ்நாடு வலு தூக்குதல் சங்கத்தின் செயலாளர் நாகராஜன் கூறுகையில், “இந்திய வலு தூக்குதல் கூட்டமைப்பின் தலைமை பதவிக்காக கேரளா உள்ளிட்ட 3 மாநில பிரதிநிதிகள் கடந்த 2017-ல் பிரிந்து சென்று, தாங்கள்தான் உண்மையான கூட் டமைப்பு என்று கூறிவருகின்றனர்.
இதுதொடர்பான வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் இருதரப்பைச் சேர்ந்த கூட்டமைப் பையும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் தற்காலிக நீக்கம் செய்துள்ளது. இதனால் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அங்கீகார கடிதத்தை வீரர்கள் பெறமுடியாத நிலை உள்ளது. இதன் காரண மாகவே கோவிந்தசாமி உள்ளிட்ட 60 இந்திய வீரர்களுக்கு விசா மறுக் கப்பட்டுள்ளது” என்றார்.