Published : 15 Sep 2019 11:58 AM
Last Updated : 15 Sep 2019 11:58 AM

பாரிஸ் மருத்துவமனையில் ஸ்டெம் செல் சிகிச்சை: மைக்கேல் ஷூமாக்கரின் உடல் நிலையில் முன்னேற்றம்

பாரிஸ்

பார்முலா கார் பந்தயத்தில் கொடி கட்டி பறந்தவர் ஜெர்மனியின் மைக்கேல் ஷூமாக்கர். கிராண்ட் பிரீ பந்தயங்களில் 91 வெற்றி கள், 7 முறை உலக சாம்பியன் பட்டம் என தன்னிகரற்ற வீரராக வலம் வந்தார். 2012-ம் ஆண்டு கார் பந்தயங்களில் இருந்து ஓய்வு பெற்ற மைக்கேல் ஷூமாக்கர் அதன் பின்னர் சாகச பயணங்களில் அதிக ஆர்வம் செலுத்தி வந்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு டிசம் பரில் பிரான்ஸில் உள்ள ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது பனிப்பாறை யில் மோதி விபத்துக் குள்ளானார் மைக்கேல் ஷூமாக்கர். அதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனால் 6 மாத காலம் கோமாவில் இருந்த ஷூமாக்கர் அதிலிருந்து மீண்டாலும் முழுமை யாக குணமடையவில்லை. சுமார் 10 மாதங்கள் பிரான்ஸில் உள்ள கிரனோபல் மற்றும் லாசானேவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஷூமாக்கர் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுவிட்சர் லாந்தின் கிளான்டில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.

தொடர்ந்து வீட்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது மனைவி காரின்னா ஷூமாக்கர் அருகில் இருந்து கவனித்து வருகிறார். எனினும் மைக்கல் ஷூமாக்கரின் உடல் நிலை குறித்து காரின்னா இதுவரை எந்தவித தகவலையும் வெளியில் கூறியது இல்லை. ஆனால் மைக்கேல் ஷூமாக்கரால் நடக்க முடியாது, சரியாக தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியாது என்று மட்டும் அவரது பழைய நண்பர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பிரான்ஸில் உள்ள ஜியார்ஜெஸ்-பொம்பிடோ மருத்துவமனையில் கடந்த திங்கட் கிழமை அன்று மைக்கேல் ஷூமாக்கர் அனுமதிக்கப்பட்டதாக வும் அவருக்கு ஸ்டெம்செல் சிகிச்சை நிபுணர் பிலிப் மெனாஷே சிகிச்சை அளித்ததாகவும் லீ பாரிசியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்டெம் செல் சிகிச்சைக்குப் பின்னர் மைக்கேல் ஷூமாக்கர் ஆம்புலன்ஸ் மூலம் சுவிட்சர்லாந்தில் உள்ள வீட்டுக்கு திரும்ப உள்ளதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

மைக்கேல் ஷூமாக்கருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தோ அவரது உடல் மற்றும் மனநிலை குறித்தோ இதுவரை மருத்துவமனை நிர் வாகம் தரப்பில் எந்தவித அறிக்கை யும் வெளியிடவில்லை. ஷூமாக் கரின் குடும்பத்தினர் கூட இது குறித்து வெளியில் கூறாமல் ரகசியம் காத்து வருகின்றனர்.

இதற்கிடையே ஜியார்ஜெஸ்-பொம்பிடோ மருத்துவமனையில் பணியாற்றி வரும் பெயர் கூற விரும்பாத செவிலியர் ஒருவரை லீ பாரிசியன் நாளிதழ் சார்பில் தொடர்பு கொண்டு மைக்கேல் ஷூமாக்கரின் உடல் நிலை குறித்து கேட்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த செவிலியர், “மைக்கேல் ஷூமாக் கருக்கு சுயநினைவு திரும்பி யுள்ளது, பதில் அளிக்கும் வகை யிலும் உள்ளார் என்பதை உறுதி பட என்னால் கூற முடியும்” என்று கூறிஉள்ளார்.

மைக்கேல் ஷூமாக்கருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத் துவர் பிலிப் மெனாஷே, கடந்த 2014-ம் ஆண்டு மரணத்தின் விளம்பில் இருந்து இதய நோயாளி ஒருவரை ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் காப் பாற்றியிருந்தார்.

இதன் மூலம் முதன்முறை யாக ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகர மாக செயல்படுத்தியவர் என்ற பெருமையை பிலிப்மெனாஷே பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x