Published : 14 Sep 2019 04:30 PM
Last Updated : 14 Sep 2019 04:30 PM

தோனி ஓய்வு வதந்தி குறித்து கோலி பதில்

ஒய்வு என்பது தனிப்பட்ட நபரின் முடிவு இதில் எவரும் கருத்து கூற முடியாது என்று தோனி ஒய்வு குறித்த வதந்திக்கு இந்திய அணி கேப்டன் கோலி பதிலளித்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனான விராட் கோலி, கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் அப்போதைய கேப்டன் தோனியுடன் இணைந்து விளையாடிய படத்தை ட்விட்டரில் பதிவிட்டார்.

அத்துடன் அந்தப் பதிவில், “இந்த ஆட்டத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. சிறப்பு வாய்ந்த இரவு. இந்த மனிதர் (தோனி), என்னை உடற்தகுதி சோதனையில் ஓடுவது போன்று ரன் எடுக்க ஓட வைத்தார்” என்று கூறியிருந்தார்.

இந்த ட்வீட்டைத் தொடர்ந்து தோனி ஓய்வுபெறப் போவதை மறைமுகமாக கோலி கூறி இருக்கிறார் என்றும், மாலை 7 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி கலந்து கொள்கிறார் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

இதனைத் தொடர்ந்து தோனியின் பெயர் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. ரசிகர்கள் உண்மையில் தோனி ஓய்வு பெறப் போகிறாரா என்று குழப்பம் அடைந்தனர்.

இந்நிலையில் பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், பத்திரிகையாளர்களைச் சந்தித்து இது தொடர்பான செய்தி வதந்தி என்று பதிலளித்தார்.

இந்த நிலையில் தோனி ஓய்வு வதந்தி குறித்து கோலி பதிலளித்திருக்கிறார்.

இதுகுறித்து கோலி கூறும்போது, “நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ அனுப்பவமே எப்போதும் முக்கியமானது. இதனை வீரர்கள் வயது ஒரு எண்மட்டுமே என்று தங்கள் கடந்த காலங்களில் நிரூபித்து இருக்கிறார்கள். தோனியும் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் நிரூப்பித்திருக்கிறார். தோனியிடம் சிறப்பான விஷயம் என்னவென்றால் அவர் இந்திய கிரிக்கெட்டை நினைத்து கொண்டிருக்கிறார்.

எப்போது கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்பது முற்றிலுமான தனி நபர் சம்பந்தப்பட்ட முடிவு. இதில் எந்த நபரும் கருத்து கூற முடியாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x