முதலில் மார்ஷை வெளியேற்றி ஹெட் வந்தார்.. இப்போது ஹெட்டை வெளியேற்றி மார்ஷ் வருகை

மிட்செல் மார்ஷ். | கெட்டி இமேஜஸ்.
மிட்செல் மார்ஷ். | கெட்டி இமேஜஸ்.
Updated on
1 min read

கூடுதல் பவுலிங் வாய்ப்புக்காக 5வது டெஸ்ட் போட்டியில் வைஸ் கேப்டன் ட்ராவிஸ் ஹெட்டிற்குப் பதிலாக மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலிய அணியில் அழைக்கப்பட்டுள்ளார். ஆஷஸ் 5வது டெஸ்ட் போட்டி இன்று (வியாழன்) ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.

கடந்த ஜனவரியில் மிட்செல் மார்ஷ் கிரிக்கெட், உடல்தகுதி இரண்டிலும் ‘சோடை போனதாகக்’ கருதிய ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் அவரை உட்கார வைத்து ட்ராவிஸ் ஹெட்டை அழைத்தது. அப்போது மிட்செல் மார்ஷ் வைஸ் கேப்டன்.

இப்போது டிராவிஸ் ஹெட் வைஸ் கேப்டன் அவருக்குப் பதிலாக மிட்செல் மார்ஷ் கூடுதல் பவுலிங் தெரிவாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ட்ராவிஸ் ஹெட் நீக்கம் குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் கூறும்போது, “ட்ராவிஸ் ஹெட் ஏன் ஆடவில்லை என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். 10 டெஸ்ட்கள் ஆடியுள்ளார் ஆரோக்கியமான சராசரி வைத்துள்ளார். இந்த டெஸ்ட் போட்டியை வெல்ல வேண்டும் என்பதற்காக யாரையாவது நீக்கி விட்டு கூடுதல் பவுலரை சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதில் இம்முறை ட்ராவிஸ் ஹெட் சிக்கினார், அவருக்குப் பதிலாக மிட்செல் மார்ஷ் வந்துள்ளார். ஆனால் ட்ராவிஸ் ஹெட் ஆஸ்திரேலிய அணியின் எதிர்காலம் ஆவார்.
மேலும் டெஸ்ட் தொடரை வெற்றியுடன் முடிக்க அதே பவுலிங் வரிசையையே களமிறக்குகிறோம் ஆகவே அவர்களின் சுமையைக் குறைக்க கூடுதல் பவுலர் தேவைப்பட்டது இதனையடுத்து மிட்செல் மார்ஷை உள்ளே கொண்டு வர முடிவெடுத்தோம்.

மிட்செல் மார்ஷ் ஆல்ரவுண்டர் என்பதால் பேட்டிங்கிலும் அவர் ட்ராவிஸ் ஹெட் போல் பங்களிப்பு செய்ய முடியும், பவுலிங்கிலும் பிற பவுலர்களின் சுமையைக் குறைக்க முடியும்” என்றார் டிம் பெய்ன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in