

லண்டன்
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடரின் 5-வது ஆட்டம் இன்று லண்டனில் தொடங்கவுள்ளது. தொடரை சமன் செய்யும் முனைப்பில் இங்கிலாந்து அணி களமிறங்கவுள்ளது.
ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடை பெற்று வருகிறது. இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந் துள்ளன. இதில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஒரு டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.
இதனால் இந்த டெஸ்டில் வெற்றி பெற்று 2-2 என்ற கணக் கில் தொடரை சமன் செய்யும் நோக் கில் இங்கிலாந்து களமிறங்கு கிறது.
இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 5 இன்னிங்ஸ் களில் 671 ரன்கள் குவித்து எதி ரணியை மிரட்டி வருகிறார். அவரை சமாளிப்பது இங்கிலாந்து அணிக்கு பெரும் சவாலாக உள் ளது. இந்தத் தொடரில் ஒரு இரட்டைச் சதம் உட்பட 3 சதங்கள், 2 அரை சதங்களை அவர் விளாசியுள்ளார்.
அவரை ஆட்டமிழக்கச் செய்ய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் வியூகம் வகுத்துள்ளார். இதுவரை முடிந்துள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே இங்கிலாந்து வெற்றி கண்டுள்ளது. எனவே கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை சமன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து விளையாடவுள்ளது.
மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு கவாஜா, வார்னர், ஹெட், கேப்டன் டிம் பெய்ன் ஆகி யோர் பேட்டிங்கிலும், கம்மின்ஸ், லயன், ஹசில்வுட், சிடில் ஆகியோர் பவுலிங்கிலும் பலம் சேர்க்கின்றனர்.
இங்கிலாந்து அணியில் பர்ன்ஸ், ராய், கேப்டன் ரூட், பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இந்த டெஸ்டில் சிறப்பாக விளையாடக் கூடும். அதேபோல பவுலிங்கில் ஜோப்ரா ஆர்ச்சர் மட்டுமே சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவருக்கு உறு துணையாக கிறிஸ் வோக்ஸ், ஸ்டூ வர்ட் பிராட் ஆகியோர் சிறப்பாக பந்துவீசும் பட்சத்தில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி கிடைக்கலாம்.
நேரம்: மாலை 3.30
நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்