செய்திப்பிரிவு

Published : 11 Sep 2019 20:17 pm

Updated : : 11 Sep 2019 20:17 pm

 

சேவாக் பாணியை எதிர்நோக்கி: டெஸ்ட் தொடக்க வீரராகிறார் ரோஹித் சர்மா?

india-vs-south-africa-test-squad-rohit-likely-to-replace-rahul

புதுடெல்லி, பிடிஐ

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இருதரப்பு மற்றும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கான இந்திய அணி வரும் வியாழக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.

இந்த அணியில் பரிசோதனை முயற்சியாக கே.எல்.ராகுலுக்குப் பதிலாக ரோஹித் சர்மாவை தொடக்க வீரராக களமிறக்கலாம் என்று இந்திய அணித்தேர்வுக்குழு முடிவெடுக்கலாம் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கே.எல்.ராகுல் டெஸ்ட் போட்டிகளில் கடுமையாகத் தடுமாறி வருவதையடுத்து ரோஹித் சர்மாவை முயன்று பார்க்கலாம் என்று முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

ஹனுமா விஹாரி தன் இடத்தை மிடில் ஆர்டரில் தக்க வைத்ததாலும் ரஹானேவும் மீண்டும் தன் பார்மை மீட்டுள்ளதாலும் ரோஹித் சர்மாவுக்கு அந்த இடத்தில் வாய்ப்பு இல்லை என்பதால் தொடக்க வீரராக இறக்கிப் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

விரேந்திர சேவாக் தொடக்க வீரராக ஏற்படுத்திய தாக்கம் போல் ரோஹித் சர்மா என்கிற அதிரடி வீரரையும் டெஸ்ட் தொடக்க வீரராக உருவாக்கும் முயற்சியில் ரவி சாஸ்திரி ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இங்கிலாந்துக்கு எதிராக கே.எல்.ராகுல் 149 ரன்களை கடைசி டெஸ்ட் போட்டியில் எடுத்த பிறகே அவர் உடல்தகுதியிலும் பார்மிலும் சோடை போய் வருகிறார்.

முதல் டெஸ்ட் போட்டியில் விசாகப்பட்டிணத்தில் அக்டோபர் 2ம் தேதி நடைபெறுகிறது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி வருமாறு:

மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே, விராட் கோலி, ஹனுமா விஹாரி, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், சஹா, பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி/உமேஷ் யாதவ், அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ்

India vs South Africa Test squad: Rohit likely to replace Rahulசேவாக் ஏற்படுத்திய தாக்கத்தை எதிர்நோக்கி: டெஸ்ட் தொடக்க வீரராகிறார் ரோஹித் சர்மா?சேவாக்ரோஹித் சர்மாகோலிராகுல்டீம் இந்தியாஇந்தியா-தென் ஆப்பிரிக்கா
Popular Articles

You May Like

More From This Category

More From this Author