செய்திப்பிரிவு

Published : 11 Sep 2019 19:08 pm

Updated : : 11 Sep 2019 19:08 pm

 

5வது டெஸ்ட்: தடுமாறும் ஜேசன் ராய் நீக்கம்; இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் சாம் கரண்

ashes-roy-dropped-curran-named-in-england-xi-for-5th-test

லண்டன், ஐ.ஏ.என்.எஸ்.

தடுமாறும் ஜேசன் ராய் மற்றும் கிரெய்க் ஓவர்டன் ஆகியோரை 5வது டெஸ்ட் அணியிலிருந்து நீக்கி ஆல்ரவுண்டர்களான கிறிஸ் வோக்ஸ், சாம் கரண் ஆகியோர் இங்கிலாந்து அணியில் 5வது டெஸ்ட் போட்டிகாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தோள்பட்டைக் காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் பந்து வீச மாட்டார் ஆனால் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மெனாகத் தொடர்வார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

கிறிஸ் வோக்ஸ் முதல் 3 டெஸ்ட்களில் நடப்பு ஆஷஸ் தொடரில் ஆடினார், ஆஸி. 2-1 என்று முன்னிலை பெற்ற ஓல்ட் ட்ராபர்ட் டெஸ்ட்டில் அவர் ஆடவில்லை, சாம் கரண் தன் ஆஷஸ் அறிமுகப் போட்டியில் ஆடவிருக்கிறார்.

இங்கிலாந்து அடுத்த டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய வேண்டும், இல்லையெனில் 2001-க்க்குப் பிறகு ஆஸி.யிடம் தங்கள் சொந்த மண்ணில் தோல்வி சந்திக்கும் இழிவை சந்திக்க நேரிடும்.

இங்கிலாந்து அணி விவரம்:


ஜோ ரூட், ஜோப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரண், ஜோ டென்லி, ஜாக் லீச், பென் ஸ்டோக்ஸ் கிறிஸ் வோக்ஸ்

Ashes: Roy dropped Curran named in England XI for 5th Test5வது டெஸ்ட்: தடுமாறும் ஜேசன் ராய் நீக்கம்; இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் சாம் கரண்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author