செய்திப்பிரிவு

Published : 11 Sep 2019 16:41 pm

Updated : : 11 Sep 2019 16:41 pm

 

யூரோ கால்பந்து தகுதிப் போட்டிகள்: அதிக கோல்கள் சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

cristiano-ronaldo-breaks-euro-qualifying-goal-record
ரொனால்டோ. | கெட்டி இமேஜஸ்.

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்று சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்து சாதனையை நிகழ்த்தியுள்ளார் போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

லிதுவேனியா அணிக்கு எதிரான யூரோ 2020 கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் 4 கோல்களை அடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்ச்சுக்கல் அணிக்கு 5-1 என்ற வெற்றியைப் பெற்றுத்தந்தார்.

இதன் மூலம் ராபி கீன் என்ற வீரர் அடித்த 23 கோல்கள் சாதனையை முறியடித்து 25 கோல்கள் என்ற சாதனையை நிகழ்த்தினார் ரொனால்டோ.

கீன் இது குறித்து தன் இன்ஸ்டாகிராமில் விளையாட்டாகக் கூறும்போது, “நீங்கள் நிறைய சாதித்து விட்டீர்கள், இந்த சாதனையையாவது எனக்கு விட்டு வைக்கக் கூடாதா?” என்று பதிவிட்டுள்ளார்.

லிதுவேனியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் கோலை பெனால்டி ஸ்பாட் கிக் மூலம் அடித்த ரொனால்டோ மேலும் 3 கோல்களை அடித்து தன் மொத்த சர்வதேச கோல்களை 93 ஆக அதிகரித்துள்ளார்.

மேலும் ரொனால்டோவின் 8வது சர்வதேச கால்பந்து ஹாட்ரிக் சாதனையாகும்.


யூரோ கால்பந்து தகுதிப் போட்டிகள்: அதிக கோல்கள் சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோCristiano Ronaldo breaks Euro qualifying goal record
Popular Articles

You May Like

More From This Category

More From this Author