செய்திப்பிரிவு

Published : 10 Sep 2019 16:00 pm

Updated : : 10 Sep 2019 16:00 pm

 

ஐசிசி டெஸ்ட் தரவரிசை; அசைக்க முடியாத இடத்தில் ஸ்மித்: காலியான கோலி முதலிடம்

smith-maintains-lead-over-kohli-in-icc-test-rankings
ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி : கோப்புப்படம்

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தும், பந்துவீச்சாளர்களில் பாட் கம்மின்ஸும் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர்.

மான்செஸ்டரில் நடந்து முடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்ட் போட்டியின் போது, ஸ்மித்தின் 211 மற்றும் 82 ரன்கள் தரவரிசையில் மிகப்பெரிய உயர்வை அளித்துள்ளது.

937 புள்ளிகளுடன் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் ஸ்மித் உள்ளார். டிசம்பர் 2017-ம் ஆண்டு ஸ்மித் எடுத்த 947 புள்ளிகளைப் பெறுவதற்கு இன்னும் 10 புள்ளிகள்தான் அவருக்குத் தேவைப்படுகிறது. இன்னும் ஒரு டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 903 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடர்கிறார். 3-வது இடம் முதல் 10-வது இடம் வரை முறையே கேன் வில்லியம்ஸன், சட்டேஸ்வர் புஜாரா, ஹென்றி நிகோலஸ், ஜோ ரூட், அஜின்கயே ரஹானே, டாம் லாதம், திமுத் கருணாரத்னே, எய்டன் மார்க்ரம் ஆகியோர் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ் ஆஷஸ் தொடரின் 4-வது ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 914 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 2001-ம் ஆண்டு முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மெக்ராத் எடுத்த புள்ளிகளுக்கு இணையாக கம்மின்ஸ் எடுத்துள்ளார்.


2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் ரபாடா 64 புள்ளிகள் பின்தங்கியுள்ளார். பும்ரா 835 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேடல்வுடன் 12-வது இடத்தில் இருந்து 8-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். ஹேசல்வுட் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச்சிறந்த தரவரிசை இதுவாகும்.இதுதவிர இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் 4 இடங்கள் முன்னேறி 37-வது இடத்திலும், ரோரி பர்ன்ஸ் 6 இடங்கள் உயர்ந்து 61-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் 6 இடங்கள் முன்னேறி 60-வது இடத்திலும் உள்ளனர்.

சட்டோகிராம் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்தை 224 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வென்றது. இதில் ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்கர் ஆப்கன் இரு அரை சதங்கள் அடித்ததால், தரவரிசையில் 110-வது இடத்தில் இருந்து 63-வது இடத்துக்கு உயர்ந்தார். சதம் அடித்த ரஹமத் ஷா 93-வது இடத்தில் இருந்து 65-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

கேப்டன் ரஷித் கான் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் தரவரிசையில் 69-வது இடத்தில் இருந்து 37-வது இடத்துக்கும், முகமது நபி 85-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

பிடிஐ

Smith maintains leadICC Test rankingsKohliPat CumminsAustraliaThe Ashesவிராட் கோலிஸ்டீவ் ஸ்மித்பாட் கம்மின்ஸ்ஆஷஸ் டெஸ்ட் தொடர்ஜஸ்புரித் பும்ரா
Popular Articles

You May Like

More From This Category

More From this Author