செய்திப்பிரிவு

Published : 09 Sep 2019 21:20 pm

Updated : : 09 Sep 2019 21:20 pm

 

அதிகரிக்கிறது தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் சம்பளம்?

ravi-shastri-to-get-hefty-salary-hike-report

2021 டி20 உலகக்கோப்பை தொடர் வரை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் சம்பளம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மும்பை மிரர் பத்திரிகை தெரிவிக்கிறது.

மும்பை மிரர் செய்திகளின் படி தற்போது ரூ.8 கோடி பக்கம் ஆண்டு வருமானம் பெறும் ரவிசாஸ்திரியின் சம்பளம் ரூ.9.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை அதிகரிக்கப்படலாம் என்று தெரிகிறது.

அதே போல் பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் ஆகியோரது சம்பளம் ரூ.3.5 கோடியாக அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

புதிய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோரின் ஆண்டு சம்பளம் ரூ.2.5 கோடி முதல் ரூ. 3 கோடி வரை இருக்கலாம். இவை செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரலாம் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Ravi Shastri to get hefty salary hike-Reportஅதிகரிக்கிறது தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் சம்பளம்?
Popular Articles

You May Like

More From This Category

More From this Author