ஸ்மித் இல்லையென்றால் இரு அணிகளும் ஒன்றுதான்: ஜோ ரூட் கருத்தும் ஆஸி. ஊடக பதிலடியும் 

படம். | ஏ.எஃப்.பி.
படம். | ஏ.எஃப்.பி.
Updated on
1 min read

ஆஷஸ் கலசத்தை ஆஸ்திரேலியா அணி ஓல்ட் ட்ராபர்ட் வெற்றியுடன் தக்கவைத்ததையடுத்து இரு அணிகளுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் ஸ்டீவ் ஸ்மித் தான் என்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூற மற்றவர்கள் என்னவாம் என்று ஆஸி. ஊடகம் ஒன்று ரூட்டிற்கு எதிர்வினையாற்றியுள்ளது.

ஸ்மித் இந்தத் தொடரில் 134.20 என்ற சராசரி வைத்துள்ளார். அவரை வீழ்த்த இங்கிலாந்துக்கு தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும், இந்த ஆஷஸ் மட்டுமா, இதற்கு முந்தைய ஆஷஸ் தொடர்களிலும் இங்கிலாந்தின் வேதனையை அதிகரிக்கும் வீரராக இருந்துள்ளார்.

இந்நிலையில் ஜோ ரூட் கூறியதாவது:

இந்தத் தொடரில் பந்துவீச்சே பெரும்பங்கு ஆதிக்கம் செலுத்தியது, பேட்டிங்கில் ஸ்மித்தை எடுத்து விட்டால் இரு அணிகளும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஸ்டீவ் ஸ்மித் இத்தகைய பார்மில் இருக்கும் போது அவருக்கு வீசுவது கடினமே. அவர் அளிக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும், ஆனால் நாங்கள் இதுவரை அதைச் செய்யவில்லை, இதற்கான விலையைக் கொடுத்து விட்டோம்.

என்றார் ஜோ ரூட்.

ஆனால் ஜோ ரூட் விளக்கத்தில் திருப்தியடையாத ஆஸி. ஊடகம் அவருக்கு பதிலளிக்கும் விதமாக, " ஸ்மித் மட்டுமே வித்தியாசம் எனில் ஹேசில்வுட், கமின்ஸ், லபுஷேன் ஆடவில்லையா?” என்ற ரீதியில் கேள்வி எழுப்பி ரூட்டுக்குப் பதிலடி கொடுத்துள்ளது.

ஸ்மித் மட்டுமே வித்தியாசம் என்று கூறுவதன் மூலம் கமின்ஸ், ஹேசில்வுட், அபார பவுலிங்கையும் 58 ரன்கள் சராசரி வைத்துள்ள லபுஷேன் பேட்டிங்கும் என்ன மாதிரியான பங்களிப்பு செய்துள்ளன, இவற்றையெல்லாம் ஜோ ரூட் குறைத்து மதிப்பிடலாமா என்று கேள்வி எழுப்பி கட்டுரை வெளியிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in