Published : 08 Sep 2019 09:58 AM
Last Updated : 08 Sep 2019 09:58 AM

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் நடால், மெட்வேடேவ்

நியூயார்க்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால், ரஷ்யாவின் டேனியல் மெட்வேடேவ் மோதுகின்றனர்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 24-ம் நிலை வீரரான இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரபேல் நடால் 7-6 (8-6), 6-4, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

அமெரிக்க ஓபனில் 3 முறை வாகை சூடியுள்ள ரபேல் நடால், இன்று இரவு 10 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் 5-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மெட்வேடேவுடன் மோதுகிறார். மெட்வேடேவ் தனது அரை இறுதி சுற்றில் 7-6 (7-5), 6-4, 6-3 என்ற நேர் செட்டில் 78-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தினார்.

23 வயதான டேனியல் மெட்வேடேவ் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் கால் பதிப்பது இதுவே முதன்முறையாகும். மேலும் 2005-ம் ஆண்டுக்குப் பிறகு கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் ரஷ்ய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் டேனியல் மெட்வே டேவ். கடைசியாக 2005-ம் ஆண்டு அந்நாட்டைச் சேர்ந்த மராட் சபின் ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றிருந்தார்.

33 வயதான ரபேல் நடால் 19-வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்க உள்ளார். ஒட்டுமொத்தமாக அவர், பங் கேற்கும் 27-வது கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டி இதுவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x