Published : 06 Sep 2019 11:57 AM
Last Updated : 06 Sep 2019 11:57 AM

ஸ்மித்தின் இரட்டை சதத்தைப் பாராட்டிய சச்சின்

ஆஷிஸ் தொடரில் இரட்டை சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்துக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆஷிஸ் தொடரில் இரண்டாவது நாள் ஆட்டத்தில், மொத்தம் 319 பந்துகளைச் சந்தித்த ஸ்மித் 24 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 211 ரன்கள் எடுத்து ஜோ ரூட் பந்தில் ஆட்டமிழந்தார்.

பல்வேறு சர்ச்சைகளிலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பி வந்துள்ள ஸ்மித் தனது சிறப்பான பங்களிப்பை ஒவ்வொரு போட்டியிலும் அளித்து வருகிறார். ஆஷிஸ் போட்டியிலும் ஸ்மித், இங்கிலாந்துக்கு எதிராக வலுவான ரன் குவிப்பை வழங்கக் காரணமாகி இருக்கிறார். இந்நிலையில் ஸ்மித்தின் இரட்டை சதத்தை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ சிக்கலான விளையாட்டு முறை. ஆனால், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மனநிலை. நம்பமுடியாத மறுபிரவேசம்! (கம் பேக்) ஸ்மித் ” என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி ஸ்டார்க்கின் அதிரடி ஆட்டத்துடன் 8 விக்கெட்டுகளை இழந்து 497 ரன்னிற்கு டிக்ளேர் செய்தது.

இங்கிலாந்து அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹார்சர் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. ஸ்வர்ட் போர்ட் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து விளையாடிய இங்கிலாந்து 10 ஓவர்கள் ஆடி ஒருவிக்கெட் இழப்புக்கு 23 ரன்களை எடுத்துள்ளது. ஆட்ட முடிவில் ரோரி பர்ன்ஸ் 15 ரன்களுடனும் ஓவர்டன் 3 ரன்களுடனும் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x