டி20: 96 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தென் ஆப்பிரிக்காவிடம் மடிந்த வங்கதேசம்

டி20: 96 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தென் ஆப்பிரிக்காவிடம் மடிந்த வங்கதேசம்
Updated on
1 min read

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்க அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 2, டி-20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல்போட்டி மிர்புரில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற தென்னாப் பிரிக்கா முதலில் பேட் செய்தது.

அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் டி கார் 8 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் கேப்டன் டு பிளெஸிஸ், டுமினி ஜோடி சேர்ந்தனர். டுமினி 18 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து மில்லரும் (1) ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் கேப்டன் டூ பிளெஸிஸ் அற்புதமாக ஆடி 35 பந்துகளில் அரை சதம் அடித்தார். ரஸ்ஸவ் மறுமுனையில் அதிரடியாக விளையாட ஸ்கோர் உயர்ந்தது. அவர் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டூ பிளெஸிஸ் 61 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர் களில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. வங்கதேசம் தரப்பில் அராபத் சன்னி 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் பேட் செய்த வங்கதேசத்தின் தொடக்க வீரர்கள தமிம் இக்பால் (5), சவுமியா சர்க்கார் (7) சொற்ப ரன்களில் ஆட்டமிழன்தனர். ஷகிப் அல் அசன் 26 ரன்களும், முஸ்புகுர் ரஹிம் (17), லிட்டன் தாஸ் (22) ரன்கள் எடுத்தனர் மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

இதனால், வங்கதேசம் 18.5 ஓவர்களில் 96 ரன்களுக்குள் சுருண்டது. தென்னாப்பிரிக்கா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்கா தரப்பில் ரபாடா, வைஸ், டுமினி தலா 2 விக்கெட்டுகளும், அபோட், பர்னெல், பங்கிசோ தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை டூ பிளெஸிஸ் வென்றார். அடுத்த டி-20 போட்டி டாகாவில் நாளை நடக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in