Published : 04 Sep 2019 05:25 PM
Last Updated : 04 Sep 2019 05:25 PM

ஐபிஎல்: டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இணைய ரவிச்சந்திரன் அஸ்வின் தயார் 

புதுடெல்லி, ஐ.ஏ.என்.எஸ்.

வரும் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாகச் செயல்பட்ட, புறக்கணிக்கப்பட்ட இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இணைய தயாராகியுள்ளார்.

இது தொடர்பாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அதிகாரி ஐ.ஏ.என்.எஸ். செய்தி ஏஜென்சியிடம் கூறும்போது, “ஆம், கிங்ஸ் லெவனின் ஒரு இயக்குநர் கையெழுத்துக்காகக் காத்திருக்கிறோம். கடந்தத் தொடரைப் பார்க்கும் போது இந்தத் தொடரில் நாங்கள் விளையாடும் பிட்ச்களில் அஸ்வின் ஒரு நல்ல பங்கை ஆற்றுவார் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

2018-ம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ரூ.7.6 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட அஸ்வின் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 14 போட்டிகளில் கிங்ஸ் லெவ்ன அணியை கேப்டனாக வழிநடத்தி 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக ஆஃப் ஸ்பின்னர்125 விக்கெட்டுகலை 139 ஐபிஎல் போட்டிகளில் வீழ்த்தியுள்ளார், சிக்கன விகிதம் ஓவருக்கு 6.79 ரன்கள், குறைந்தது 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்களில் இது சிறந்த சிக்கன விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் சரி, கிங்ஸ் லெவன் பஞ்சாபும் சரி இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. கிங்ஸ் லெவன் அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிங்ஸ் லெவன் பயிற்சியாளராக இருந்த நியூஸிலாந்தின் மைக் ஹெசன் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் இணைந்தார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி அஜிங்கிய ரஹானேவையும் ராஜஸ்தானிலிருந்து அழைத்து வர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x