அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி
Updated on
1 min read

நியூயார்க்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொட ரின் 4-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 6-3, 3-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் 22-ம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். அதேவேளையில் 6-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் 6-3, 2-6, 4-6, 3-6 என்ற செட் கணக்கில் 20-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் டிகோ ஸ்வார்ட்ஸ்மேனிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

13-ம் நிலை வீரரான பிரான்ஸின் மோன்பில்ஸ் 6-1, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் பப்லோ அண்டுஜாரையும், 24-ம் நிலை வீரரான இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி 6-1, 6-4, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லெவையும் வீழ்த்தி கால் இறுதியில் நுழைந்தனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் முதல் நிலை வீராங் கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, 13-ம் நிலை வீராங் கனையான சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக்கை எதிர்த்து விளையாடினார். இதில் ஒசா காவை 7-5, 6-4 என்ற நேர் செட் டில் அதிர்ச்சிகரமாக வீழ்த்தி கால் இறுதியில் கால் பதித்தார் பெலின்டா பென்சிக்.

15-ம் நிலை வீராங்கனையான கனடாவின் பியான்கா ஆண்ட் ரெஸ்கு, 23-ம் நிலை வீராங் கனையான குரோஷியாவின் டோனோ வேகிக், 25-ம் நிலை வீராங்கனையான பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in