Published : 03 Sep 2019 04:26 PM
Last Updated : 03 Sep 2019 04:26 PM

டூர் மேட்சில் ஆஸி. கேப்டனாகச் செயல்பட்ட உஸ்மான் கவாஜா 4வது டெஸ்ட்டில் அதிர்ச்சி நீக்கம்

4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா நீக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சனுக்கு ஓய்வு அளிக்கப்படுள்ளது.

டூர் மேட்சில் டெர்பிஷயருக்கு எதிராக ஆஸி. கேப்டனாகச் செயல்பட்ட கவாஜா தான் அணியிலிருந்து நீக்கப்படுவோம் என்பதை சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆஸ்திரேலிய அணியில் ஆடுவது என்பது உயர் பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றுவது போன்றதுதான், சிறிய அளவில் பார்ம் பிசகினாலும் தூக்கி எறியப்படுவர்.

ஸ்மித், வார்னர் இல்லாத போது ஆஸ்திரேலிய அணியின் தூணாகச் செயல்பட்டவர் சீரான முறையில் ரன்களை அதன் பிறகு எடுக்கவில்லை. கடந்த 13 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் கவாஜா 10 முதல் 40 ரன்களுக்கு இடையே ஆட்டமிழந்துள்ளார். ஒரேயொரு சதம் 101 நாட் அவுட் மட்டுமே அவரது நல்ல ஸ்கோராக இருந்தது. துபாயில் பாகிஸ்தானுக்கு எதிராக உருக்கும் வெயிலில் மிகப்பெரிய இன்னிங்ஸை ஆடிய கவாஜாவின் சராசரி அதன் பிறகு வெறும் 27.18தான்.

இதைவிடவும் மோசம் நடப்பு ஆஷஸ் தொடரில் அவர் 122 ரன்களை 20 என்ற சராசரியில் எடுத்தது அவரது நீக்கத்துக்கு பிரதான காரணமாக அமைந்தது. இங்கிலாந்தில் கவாஜாவின் சராசரி 12 இன்னிங்ஸ்களில் வெறும் 19.66 தான்.

தென் ஆப்பிரிக்காவில் கவாஜாவின் 5 டெஸ்ட் சராசரி 24.20. பிறகு இலங்கை மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான 5 டெஸ்ட்களில் கவாஜாவின் சராசரி 14.63 தான், இந்தியாவில் இன்னும் அவர் டெஸ்ட் போட்டியில் ஆடியதில்லை.

ஸ்மித்துக்குப் பதிலாக இறங்கிய லபுஷேன் பிரமாதமாக பேட் செய்து வருவதாலும், கன்கஷன் முடிந்து திரும்பியுள்ள ஸ்மித்துக்காகவும் கவாஜா தன் இடத்தை இழக்க நேரிட்டுள்ளது.

மான்செஸ்டரில் நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி வருமாறு:

டிம் பெய்ன் (கேப்டன்), பாட் கமின்ஸ், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், ட்ராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன், நேதன் லயன், பீட்டர் சிடில், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மேத்யூ வேட், டேவிட் வார்னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x