ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: மும்பை அணியின் வீரர் மற்றும் பயிற்சியாளரானார் அனெல்கா

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: மும்பை அணியின் வீரர் மற்றும் பயிற்சியாளரானார் அனெல்கா
Updated on
1 min read

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 2-வது சீசனில் விளையாடவுள்ள மும்பை இண்டியன்ஸ் அணியின் வீரர் மற்றும் பயிற்சியாளராக பிரான்ஸ் முன்கள வீரர் நிகோலஸ் அனெல்கா நியமிக்கப்பட்டுள் ளார்.

அனெல்கா 2-வது முறையாக வீரர் மற்றும் பயிற்சியாளராக விளையாடவுள்ளார். இதற்கு முன்னர் 2012-ல் சீன லீக் போட்டி யில் ஷாங்காய் ஷென்ஹுவா கிளப்பின் வீரர் மற்றும் பயிற்சி யாளராக செயல்பட்டுள்ளார். அந்த அனுபவமும், அவரு டைய ஆர்வமும் மும்பை அணியை சிறப்பாக விளையாட ஊக்கப்படுத்தும் என எதிர் பார்க்கப்படுகிறது.

கடந்த சீசனில் மும்பை அணிக்காக விளையாடிய அனெல்கா இரு கோல்களை அடித்ததோடு, இரு கோல் அடிக்க உதவியாக இருந் தார். இதுதவிர கடந்த சீசனில் சிறந்த வீரர்கள் வரிசையில் 5-வது இடத்தையும் பிடித்தார்.

இது தொடர்பாக மகிழ்ச்சி தெரி வித்துள்ள அனெல்கா, “மும்பை அணிக்கு பயிற்சியளிக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்திருப் பதற்காக அணி நிர்வாகத் துக்கு நன்றி தெரிவித்துக் கொள் கிறேன். 2-வது சீசனில் விளை யாடுவதற்காக நாங்கள் அனை வரும் ஆர்வத்தோடு காத்திருக் கிறோம். பயிற்சியாளர் பணியை ஏற்கவும், மும்பை அணியை வலுவான அணியாக களமிறக்கு வதற்கும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன். அனைவரையும் விரைவில் சந்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மும்பை அணியின் உரிமை யாளர் ரன்பீர் கபூர் கூறியதாவது: அனெல்கா எங்கள் அணியின் வீரர் மற்றும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி யளிக்கிறது. கடந்த சீசனில் அவரு டைய ஆட்ட உத்திகளும், நம்பிக் கையான அணுகுமுறையும் எங்களை கவர்ந்தது. அனெல் காவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம். இந்த முறை சாம்பியனாக நாங்கள் முயற்சிப்போம் என்றார்.

அனெல்கா 69 சர்வதேச போட்டிகளிலும், 500 கிளப் போட்டி களிலும் விளையாடிய அனுபவம் கொண்டவர். பிரான்ஸ் அணிக் காக மட்டுமின்றி, ஆர்செனல், செல்சீ, மான்செஸ்டர் சிட்டி, ரியல் மாட்ரிட், லிவர்பூல், ஜுவென்டஸ் ஆகிய கிளப்புகளுக்காகவும் ஆடியிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in