பும்ரா ஹாட்ரிக்கில் நடந்தது என்ன? கேப்டன் விராட் கோலி சுவாரஸ்யம்

பும்ரா ஹாட்ரிக்கில் நடந்தது என்ன? கேப்டன் விராட் கோலி சுவாரஸ்யம்
Updated on
1 min read

சனிக்கிழமையன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய ‘பூம் பூம்’ பும்ரா வீசிய அந்த ஹாட்ரிக் பந்து, அப்பீல், ரிவியூ குறித்து என்ன நடந்தது என்று கேப்டன் விராட் கோலி சுவாரஸ்யமாக விளக்கியுள்ளார்.

ராஸ்டன் சேஸ் விக்கெட்தான் பும்ராவின் ஹாட்ரிக் விக்கெட்டாகும்.

பிசிசிஐ.டிவிக்காக பும்ராவை நேர்காணல் செய்த கோலி கூறியதாவது:

ஆம், நாங்கள் கலந்தாலோசித்தோம். பும்ராவிடம் கேட்டேன் அவர் என்ன நினைக்கிறார் என்று. சேஸ் அந்தப் பந்தை மட்டையில் ஆடினாரோ என்று கேட்டேன். மட்டையில் படவில்லை என்றால் பந்தின் திசை ஸ்டம்புக்கு நேரகா இருந்ததா என்பதே. அப்போது பும்ரா எல்லாம் லைனில் இருக்கிறது, ஆனால் பேட்டோ என்ற சந்தேகமாக இருக்கிறது என்றார்.

ஆகவே நாங்கள் அனைவரும் ஆலோசித்தோம் அப்போதுதான் ரஹானே வந்தார் ராஸ்டன் சேஸ் மட்டை பந்துக்கு தாமதமாகவே வந்தது என்றார், அதாவது முதலில் கால்காப்பைத் தாக்கியது என்றார், சரி ரிவியூ செல்வோம் என்று சென்றோம். அது சரியாக அமைந்து விட்டது.

இவ்வாறு கூறினார் கோலி.

பும்ரா இது குறித்துக் கூறும்போது, கோலி ரிவியூ செய்ய முடிவெடுத்ததால்தான் அது ஹாட்ரிக் ஆனது, ஆகவே ஹாட்ரிக் சாதனையை கேப்டன் கோலிக்கு அர்ப்பணிக்கிறேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in