

லெக்ஸிங்டன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் சாகேத் மைனேனி தோல்வி கண்டு போட்டியில் இருந்து வெளியேறினார். அமெரிக்காவின் லெக்ஸிங்டன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் மைனேனி 2-6, 1-6 என்ற நேர் செட்களில் பிரிட்டனின் லியாம் பிராட்டிடம் தோல்வி கண்டார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. சாகேத் மைனேனி-பல்கேரியாவின் டிமிட்ரோவ் குட்ரோவ்ஸ்கி ஜோடி தங்களின் முந்தைய சுற்றில் 7-5, 5-7, 10-7 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் போல்ட்-ஆண்ட்ரூ விட்டிங்டன் ஜோடியைத் தோற்கடித்தது.
ராம்குமார்-ஆஸ்திரேலியா வின் ஜான் மில்மான் ஜோடி 6-0, 6-0 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் தகுதி நிலை வீரர்களான சாம் பர்னெட்-ஜெஸ்ஸி விட்டன் ஜோடியைத் தோற்கடித்து காலிறுதிக்கு முன் னேறியது.