Published : 30 Aug 2019 08:49 PM
Last Updated : 30 Aug 2019 08:49 PM

ஹோல்டரின் அருமையான பந்துக்கு ஆட்டமிழந்தார் கே.எல்.ராகுல்

கிங்ஸ்டன் டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் டாஸ் வென்று முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார்.

முதல் ஒன்று-இரண்டு மணி நேரங்களுக்கு வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆட்டக்களம் என்பதால் கவனமாக ஆட வேண்டிய நிலை, ஆனால் கே.எல்.ராகுல் ஏற்கெனவெ கேப்ரியலின் அபரிமிதமான இன்ஸ்விங்கரில் படக்கூடாத இடத்தில் ஒரு அடி வாங்கினார்.

பிறகு 2 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஹோல்டரின் பந்து ஒன்று மிடில் ஸ்டம்பில் பிட்ச் ஆகி அவுட் ஸ்விங்கராக ராகுல் மட்டையின் வெளி விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் கார்ன்வாலிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

மயங்க் அகர்வால் ஒரு எட்ஜ் பவுண்டரி ஒரு அருமையான கவர் பவுண்டரியுடன் 15 ரன்களுடனும் செடேஷ்வர் புஜாரா ரன் எடுக்காமலும் ஆடிவருகின்றனர். இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் எடுத்துள்ளது.

முன்னதாக இந்திய அணி வெற்றிக்கூட்டணியை மாற்றாமல் களமிறங்கியது, மே.இ.தீவுகளில் ஷேய் ஹோப் காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை அவருக்குப் பதிலாக ஜஹ்மர் ஹாமில்டன் விக்கெட் கீப்பராகச் சேர்க்கப்பட்டுள்ளார். ரகீம் கார்ன்வால் அணிக்கு வந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x