

இந்தியாவுக்காக எனது சிறந்த பங்களிப்பை அளிக்க அர்ஜூனா விருது என்னை எப்போதும் ஊக்குவிக்கும் என்று இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான ஜடேஜா தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத் துறையில் தலைசிறந்த சாதனையாளர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கான வீரர்கள் பட்டியல் கடந்த 20-ம் தேதி அறி விக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேசிய விளையாட்டு தினமான நேற்று குடியரசுத் தலைவர் மாளி கையில் நடைபெற்ற விழாவில் வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இதில், அர்ஜூனா விருது பெற்ற ஜடேஜா மேற்கிந்திய தீவுகளுடான போட்டியில் பங்கேற்றிருப்பதால் விழாவில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் தனக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டதற்கு ஜடேஜா நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜடேஜா கூறும்போது, “ அர்ஜூனா விருது அளித்து என்னை கவுரவப்படுத்தியதற்காக அரசுக்கு நன்றி. மற்ற விருதுகளை வென்ற வீரர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் விளையாட்டுத் துறையில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். இந்தியாவுக்காக எனது சிறந்த பங்களிப்பை எப்போதும் அளிக்க அர்ஜூனா விருது எப்போதும் என்னை ஊக்கப்படுத்தும். இந்தியாவுக்காக நான் விளையாடும் போட்டிகளில் அணி வெற்றி பெற செய்ய முயற்சிப்பேன். எனது நாட்டை கவுரவப்படுத்துவேன்” என்றார்.
இது தொடர்பான வீடியோ பிசிசிஐ வெளியிட்டுள்ளது.