இந்தியா - மே.இ.தீவுகள் கடைசி டெஸ்டில் இன்று மோதல்

இந்தியா - மே.இ.தீவுகள் கடைசி டெஸ்டில் இன்று மோதல்
Updated on
1 min read

கிங்ஸ்டன்

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2-வது மற் றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக் காவில் உள்ள சபினா பார்க் மைதா னத்தில் இன்று தொடங்குகிறது.

ஆண்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத் திருந்தது. வேகப் பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்களை யும், இஷாந்த் சர்மா 8 விக்கெட் களையும் (இரு இன்னிங்ஸையும் சேர்த்து) கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தனர். அதேவேளையில் மொகமது ஷமி, சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் உதவியாக இருந்தனர்.

பேட்டிங்கில் அஜிங்க்ய ரஹானே மீண்டும் பார்முக்கு திரும்பி இருப்பது சிறப்பான விஷயமாக கருதப்படுகிறது. நடுவரிசையில் ஹனுமா விகாரி விரைவாக ரன் கள் சேர்ப்பது கூடுதல் பலமாக உள் ளது. 2-வது இன்னிங்ஸில் அரை சதம் அடித்த விராட் கோலி இம் முறை 3 இலக்க ரன்களை எட்டு வதில் முனைப்பு காட்டக்கூடும்.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா ஆகியோரிடம் இருந்து உயர்மட்ட செயல்திறன் வெளிப்படவில்லை. இவர்கள் பார்முக்கு திரும்பும் பட்சத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கலாம். இன்றைய விளையாடும் லெவனில் மாற்றங்கள் இருக்குமா என்பது சற்று சந்தேகம்தான். ரிஷப் பந்த் போதிய அளவிலான ரன்கள் சேர்க் காத போதிலும் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என்றே கருதப்படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியை பொறுத்தவரையில் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் சமீப காலமாக பேட்டிங்கில் கடும் பின் னடைவை சந்தித்து வருகிறது. வேகப்பந்து வீச்சு பலம் கண் டுள்ள நிலையில் பேட்டிங் மிகுந்த கவலையளிக்கும் வகையில் உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி யின் இரு இன்னிங்ஸிலும் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட அரை சதத்தை எட்டிப் பார்க்கவில்லை. போதாதக் குறைக்கு 2-வது இன்னிங்ஸில் ஒட்டுமொத்த அணியும் 100 ரன்களுக்குள் சுருண்டது.

ஷிம்ரன் ஹெட்மையர், ஷாய் ஹோப், ராஸ்டன் சேஸ் உள்ளிட் டோரிடம் இருந்து எதிர்பார்த்த அளவிலான திறன் வெளிப்படாதது ஒட்டுமொத்த அணியின் செயல் திறனையும் பாதித்துள்ளது. பேட்டிங்கை வலுப்படுத்தும் வித மாக ஆல்வுரண்டரான கீமோ பால் இன்றைய ஆட்டத்தில் சேர்க்கப் படக்கூடும். வலுவான இந்திய வேகப் பந்து வீச்சுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் பேட்ஸ் மேன்கள் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே தொடரை சமன் செய்வதற்கான வழிகளை தேடமுடியும்.

நேரம்: இரவு 7

நேரலை: சோனி டென் 3

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in