கேல்ரத்னா விருதை பெற்றார் தீபா மாலிக்

குடியரசுத் தலைவார் ராம் நாத் கோவிந்திடம் இருந்து கேல்ரத்னா விருது பெறும் பாரா தடகள வீராங்கனையான தீபா மாலிக். படம்:பிடிஐ
குடியரசுத் தலைவார் ராம் நாத் கோவிந்திடம் இருந்து கேல்ரத்னா விருது பெறும் பாரா தடகள வீராங்கனையான தீபா மாலிக். படம்:பிடிஐ
Updated on
1 min read

புதுடெல்லி

விளையாட்டுத் துறையில் தலை சிறந்த சாதனையாளர்களை கவுர விக்கும் விதமாக ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கான வீரர்கள் பட்டியல் கடந்த 20-ம் தேதி அறி விக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேசிய விளையாட்டு தினமான நேற்று குடியரசுத் தலைவர் மாளி கையில் நடைபெற்ற விழாவில் வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற குண்டு எறிதல் வீராங்கனையான தீபா மாலிக்குக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் கேல்ரத்னா விருதை வென்ற முதல் பாரா தடகள வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் தீபா மாலிக்.

இந்த விருதுக்கு தேர்வாகி இருந்த மல்யுத்த வீரரான பஜ்ரங் பூனியா, ரஷ்யாவில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால் விருது விழாவில் பங்கேற்கவில்லை.

எஸ்.பாஸ்கரன் (பாடி பீல்டிங்), பூனம் யாதவ் (மகளிர் கிரிக்கெட்), சோனியா லேதர் (குத்துச்சண்டை), சிங்லென்சனா சிங் கங்குஜம் (ஹாக்கி), அஜய் தாக்குர் (கபடி), உள்ளிட்ட 19 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் ரவீந்திர ஜடேஜா, மொகமது அனாஸ், அஞ்சும் மவுத்கில் , தஜிந்தர் பால் சிங் ஆகியோர் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளதால் விழா வில் பங்கேற்கவில்லை. விழாவில் துரோணாச்சாரியா விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, தயான்சந்த் விருதையும் குடியரசுத் தலைவர் வழங்கினார். - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in