Published : 29 Aug 2019 04:24 PM
Last Updated : 29 Aug 2019 04:24 PM

வெற்றிகரக் கேப்டனாக வலம் வருவாரா? தோனியின் சாதனையை முறியடிப்பாரா கோலி

ஜமைக்கா,

மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்து, இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக வலம்வருவதற்கு கேப்டன் விராட் கோலிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் அதிகமான வெற்றிகளைக் குவித்தவகையில் தோனி 27 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார். மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கோலி தலைமையில் இந்திய அணி வென்றதையடுத்து, தோனியின் 27 வெற்றிகள் சாதனையை கோலி சமன் செய்தார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக நாளை கிங்ஸ்டனில் தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் தோனியின் 27 வெற்றிகள் சாதனையை விராட் கோலி முறியடித்து வெற்றிகரமான கேப்டன் எனும் பெயரைப் பெறுவார்.

தோனி கேப்டனாக இருந்து அணியை வெற்றிகரமாக வழிநடத்தியதில் அவரின் வெற்றி 45 சதவீதமாக இருக்கி்றது. அதாவது தோனி தலைமையில் இந்திய அணி 27 டெஸ்ட் போட்டிகளில் வெற்றியும், 18 போட்டிகளில் தோல்வியும், 15 ஆட்டங்களில் டிராவும் கண்டுள்ளது.

தோனியுடன் ஒப்பிடும் போது, விராட் கோலி தலைமையில் இந்திய அணி 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 27 போட்டிகளில் வெற்றியையும், 10 போட்டிகளில் வெற்றியும், 10 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. வெற்றி சதவீதத்தை தோனியுடன் ஒப்பிடும்போது கோலி தலைமையில் இந்திய அணி 55 சதவீத வெற்றிகளைப் பெற்றுள்ளது.

வெளிநாடுகளில் அதிகமான டெஸ்ட்போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெறவைத்த வகையில், கங்குலியின் சாதனையையும் கடந்த போட்டியில் கோலி முறியடித்தார். கங்குலி தலைமையில் இந்திய அணி வெளிநாடுகளில் 11 போட்டிகளி்ல வென்றிருந்தது. ஆனால், அதை முறியடித்து 12 வெற்றிகளை கோலி தலைமையில் இந்திய அணி பெற்றுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வுக்குப்பின் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றார். கடந்த 2018-ம் ஆண்டில் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x