

நியூயார்க்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொட ரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர்களான டொமினிக் தியம், ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ், ராபர்டோ பவுதிஸ்டா அகுட், கரேன் கச்சனோவ் ஆகியோர் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 2-வது நாளான நேற்று முன்தினம் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட் டம் ஒன்றில் 4-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தியம், 87-ம் நிலை வீரரான இத்தாலியின் தாமஸ் ஃபேபியானோவை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 23 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டொமினிக் தியமை 6-4, 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார் தாமஸ் ஃபேபியானோ.
இதேபோல் 8-ம் நிலை வீரரான கிரீஸ் நாட்டின் ஸ்டீபனோஸ் சிட் சிபாஸ், 43-ம் நிலை வீரரான ரஷ்யா வின் ஆந்த்ரே ரூபலேவிடம் சுமார் 3 மணி நேரம் 54 நிமிடங்கள் போராடி 4-6, 7-6, 6-7, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். அதேவேளையில் 10-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ராபர்டோ பவுதிஸ்டா அகுட் 6-3, 1-6, 4-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் 47-ம் நிலை வீரரான கஜகஸ்தானின் மிகைல் குகுஷ்கினிடம் வீழ்ந்தார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 19 நிமிடங்கள் நடைபெற்றது.
9-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் சுமார் 3 மணி நேரம் 51 நிமிடங்கள் போராடி 6-4, 5-7, 5-7, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் 216-ம் நிலை வீரரான கனடாவின் வசக் பாஸ்பிசிலிடம் தோல்வியடைந்தார்.
2-ம் நிலை வீரரும் 3 முறை சாம்பியனுமான ஸ்பெயினின் ரபேல் நடால் 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் 60-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மானையும், 6-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் 6-1, 6-3, 3-6, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் 41-ம் நிலை வீரரான மால்டோவாவின் ராடு அல்போட்டையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
13-ம் நிலை வீரரான பிரான்ஸின் கெல் மோன்பில்ஸ், 14-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜான் இஸ்னர், 22-ம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச் ஆகியோரும் 2-வது சுற்றில் கால் பதித்தனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் முதல் நிலை வீரரான ஜப்பா னின் நவோமி ஒசாகா 6-4, 6-7 (5-7), 6-2 என்ற செட்கணக்கில் 84-ம் நிலை வீரராங்கனையான ரஷ்யா வின் அனா பிளின்கோவாவையும், 4-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப் 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் 135-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் நிக்கோல் கிப்ஸை யும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
6-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா விட் டோவா, 7-ம் நிலை வீராங்கனை யான நெதர்லாந்தின் கிகி பெர் டென்ஸ், 9-ம் நிலை வீராங்கனை யான பெல்லாரசின் ஆர்யனா சபலென்கா, 13-ம் நிலை வீராங் கனையான சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக், 19-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி ஆகியோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.