

கன்னியாகுமரியில் நடந்த தேசிய தற்காப்புக்கலைப் போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
தமிழ்நாடு பென்சாக் சிலாட் சங்கம், அகில இந்திய பென்சாக் சிலாட் சம்மேளனம் சார்பில் 8-வது தேசிய தற்காப்புக்கலைப் போட்டி கன்னியாகுமரியில் நடந்தது. 3 நாட்கள் நடந்த இப்போட்டியில் தமிழகம், டெல்லி, அசாம், பஞ்சாப், ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி உட்பட 18 அணிகள் பங்கேற்றன.
சீனியர் மற்றும் சப் ஜூனியர் பிரிவுகளில் தமிழக அணி சாம்பியன் ஆனது. ஜூனியர் பிரிவில் பஞ்சாப் அணிக்கு சாம்பியன் பட்டம் கிடைத்தது. வெற்றிபெற்ற அணிகளுக்கு சர்வதேச சிலம்பாட்ட கழக துணைத் தலைவர் ஜஸ்டின் பரிசு வழங்கினார்.