ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வாய்ப்பு: சரத் கமல் நம்பிக்கை

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரின் வெற்றி கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்ற சென்னை லயன்ஸ் அணியின் உரிமையாளர்களுடன் கேப்டன் சரத் கமல்.
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரின் வெற்றி கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்ற சென்னை லயன்ஸ் அணியின் உரிமையாளர்களுடன் கேப்டன் சரத் கமல்.
Updated on
1 min read

சென்னை

டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வெல்ல வாய்ப்ப்பு இருப்பதாக நட்சத்திர வீரர் சரத் கமல் நம்பிக்கை தெரிவித்தார்.

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரின் 3-வது சீசனில் சரத் கமல் தலைமையிலான சென்னை லயன்ஸ் அணி சமீபத்தில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இதையடுத்து அந்த அணியின் வெற்றி கொண்டாட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற சரத் கமல் கூறுகையில்,“ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 50 வாரங்களுக்கு குறைவாகவே உள்ளது. இந்தத் தொடரில் நாம் அணிகள் பிரிவில் விளையாட தகுதி பெற்றால் தொடக்கத்திலேயே ரவுண்ட்-16ல் விளையாடுவோம். நாம் பதக்கம் வெல்ல சிறிய அளவிலான வாய்ப்பு உள்ளது. இது போட்டி அட்டவணையை பொறுத்தது. எனினும் பதக்கம் வெல்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளன.

ஜனவரி மாதம் போர்ச்சுக்கல் நாட்டில் ஒலிம்பிக் தகுதி சுற்று (இரட்டையர் பிரிவு) நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் ஒற்றை யர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டங்களுக்கான தகுதி சுற்றும் நடைபெற உள்ளது. அதற்கு முன்ன தாக செப்படம்பர் 15-ல் இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் கலந்து கொள்கிறோம்.

இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் நானும், சத்திய னும் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது. அணி பிரி வில் பொதுவாகவே நாம், கால் இறுதி வரை முன்னேறி விடுவோம். இம்முறை நாங்கள் அரை இறுதியில் கால்பதிக்கும் பட்சத்தில் நிச்சயம் பதக்கம் வெல்வோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in