Last Updated : 07 Jul, 2015 09:55 AM

 

Published : 07 Jul 2015 09:55 AM
Last Updated : 07 Jul 2015 09:55 AM

விம்பிள்டன் டென்னிஸ்: சஃபரோவா அதிர்ச்சி தோல்வி

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்த செக்.குடியரசின் லூஸி சஃபரோவா அதிர்ச்சி தோல்வி கண்டார்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சர்வதேச தரவரிசையில் 47-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் கோகோ வந்தேவ்கே 7-6 (1), 7-6 (4) என்ற நேர் செட்களில் சஃபரோவாவைத் தோற்கடித்தார்.

விம்பிள்டனில் முதல்முறை யாக காலிறுதிக்கு முன்னேறியி ருக்கும் கோகா, அடுத்ததாக ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை சந்திக்கவுள்ளார். போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஷரபோவா தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் கஜகஸ்தானின் ஜெரீனா டியாஸை தோற்கடித்தார்.

உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். விம்பிள்டனில் 6-வது பட்டம் வெல்வதில் தீவிரம் காட்டி வரும் செரீனா 67 நிமிடங்களில் போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார். அவர் இந்த ஆட்டத்தில் 10 ஏஸ் சர்வீஸ்களை பறக்கவிட்டார். இதுவரை வீனஸுடன் 26 முறை மோதியுள்ள செரீனா 14-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் பெலாரஸின் தகுதி நிலை வீராங்கனை ஓல்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கட் 7-5, 6-1, 6-7 (7), 7-6 (6) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸைத் தோற்கடித்தார். இதன்மூலம் கடந்த விம்பிள்டனில் நிக்கிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மற்றொரு ஆடவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கனடாவின் வசேக் போஸ்பிஸில் 4-6, 6-7 (4), 6-4, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் செர்பியாவின் விக்டர் டிராய்க்கியைத் தோற்கடித்தார். இதன்மூலம் விம்பிள்டனில் காலிறுதிக்கு முன்னேறிய 3-வது கனடா வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் கனடாவைச் சேர்ந்த ராபர்ட் பாவெல் (1908, 1910, 1912), மிலோஸ் ரயோனிச் (2014) ஆகியோர் மட்டுமே விம்பிள்ட னில் காலிறுதிக்கு முன்னேறியிருக் கின்றனர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x