Last Updated : 21 Jul, 2015 04:04 PM

 

Published : 21 Jul 2015 04:04 PM
Last Updated : 21 Jul 2015 04:04 PM

கொல்கத்தாவில் 2016 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி

2016, மார்ச் 11-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கான மைதான விவரங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இறுதிப் போட்டி கொல்கத்தாவில் ஏப்ரல் 3-ம் தேதி நடைபெறுகிறது. இது தவிர பெங்களூரு, சென்னை, தரம்சலா, மொஹாலி, மும்பை, நாக்பூர், புதுடெல்லி ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறும்.

உலகக் கோப்பை டி20 போட்டிகளுக்கென்றே பிரத்யேகமாக நிர்வாகக் குழு ஒன்று பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x