டெஸ்ட் 4வது இன்னிங்ஸில் அதிக சிக்ஸ்: பென் ஸ்டோக்சின் அரிய சாதனையும் சில சுவாரஸ்யத் தகவல்களும்

டெஸ்ட் 4வது இன்னிங்ஸில் அதிக சிக்ஸ்: பென் ஸ்டோக்சின் அரிய சாதனையும் சில சுவாரஸ்யத் தகவல்களும்
Updated on
1 min read

பென் ஸ்டோக்ஸ் தனது வாழ்நாளின் மகா இன்னிங்சில் நேற்று 135 ரன்களில் 8 சிக்சர்களை விளாசினார். இலக்கை விரட்டும் அணி வெற்றி பெறும் ஒரு 4வது இன்னிங்சில் அதிக சிக்சர்கள் என்ற சாதனையை பென் ஸ்டோக்ஸ் நிகழ்த்தியுள்ளார்.

நேற்று பென் ஸ்டோக்ஸ் ஒரு கட்டம் வரை மிகப் பிரமாதமாக ஒரு டெஸ்ட் வீரர் போல் பந்துகளை அதிகவனத்துடன் கையாண்டு சரியான உத்தியில் ஆடுவது, தவிர்ப்பது போன்றவற்றைக் கடைபிடித்தார். ஆனால் 9 விக்கெட்டுகள் போன பிறகு அவர் உடலில் அரக்கன் புகுந்தான். சிக்சர்களாக வெளுத்துக் கட்டினார்.

8 டவரிங் சிக்சர்களை அவர் விளாசி ஆஸ்திரேலியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதுவும் ஆஸி.யின் சிறந்த பவுலர் ஜோஷ் ஹேசில்வுட்டை 1 பவுண்டரி 2 சிக்சர்கள் என்று விளாசியது டிம் பெய்னை நிலைகுலையச் செய்தது.

இதற்கு முன்பாக ஒரு டெஸ்ட் போட்டியின் 4வது இன்னிங்சில் அதிக சிக்சர்கள் அடித்த 2 வீரர்களுமே நியூஸிலாந்தைச் சேர்ந்தவர்கள்.

நேதன் ஆஸ்ட்ல் ஒரு முறை இங்கிலாந்துக்கு எதிராக ஒரு அசாத்திய விரட்டலில் உலக சாதனை இரட்டைச் சதத்தை (222) 151 பந்துகளில் விளாசினார் அன்று அவர் 11 சிக்சர்கள் அடித்தார், ஆனால் நியூஸிலாந்தினால் வெற்றி பெற முடியவில்லை. இது நடந்தது 2002-ல்.

அதே போல் மற்றொரு நியூசிலாந்து வீரர் டிம் சவுதி 2008-ல் இதே இங்கிலாந்துக்கு எதிராக நேப்பியரில் 77 நாட் அவுட் இன்னிங்சில் 9 சிக்சர்களை அடித்தார், ஆனால் இதிலும் நியூஸியால் வெற்றி பெற முடியவில்லை. தோல்வியே தழுவியது.

முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டன் மறைந்த ஹேன்சி குரோனியே, ஷாகித் அப்ரீடி, கிறிஸ் கெய்ல் ஆகியோர் முறையே 6 சிக்சர்களை டெஸ்ட் 4வது இன்னிங்சில் அடித்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் சேவாக், கங்குலி உள்ளனர், ஆனால் சேவாக் 4 சிக்ஸ், கங்குலி 3 சிக்ஸ்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in