Published : 26 Aug 2019 10:29 AM
Last Updated : 26 Aug 2019 10:29 AM

கங்குலி சாதனையை முறியடித்த கோலி: தோனியின் மைல்கல் சமன்: பும்ரா வரலாறு: சுவாரஸ்யத் தகவல்கள்

நார்த் சவுண்ட்,

வெளிநாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளைக் குவித்த கேப்டன் என்ற ரீதியில் கங்குலியின் சாதனையை முறியடித்தார் இந்திய அணியின் கேப்டன் கோலி

இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. ஆன்டிகுவாவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணியை 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமான வெற்றியைப் பெற்றது. 419 ரன்கள் வெற்றி இலக்காகக் கொண்டு ஆடிய மே.இ.தீவுகள் அணி 100 ரன்களில் ஆட்டமிழந்தது.

இந்திய அணி சார்பில் அபாரமாகப் பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். அதேபோல அஜின்கயே ராஹனே சதம் அடித்து அசத்தினார்.


இந்திய அணியின் வெற்றி குறித்த சில சுவாரஸ்யத் தகவல்கள்

  • வெளிநாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பெற்றி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதற்கு முன் கல்லே நகரில் இலங்கைக்கு எதிராக 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றிருந்தது. அதைக்காட்டிலும் அதிகமாக தற்போது ஆன்டிகுவாவில் 318 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே மிகப்பெரிய வெற்றியாக இருக்கிறது.
  • வெளிநாடுகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன் எனும் அடிப்படையில் இந்திய அணியின் கேப்டன் கோலி, முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்தார். கங்குலி தலைமையில் வெளிநாடுகளில் இந்திய அணி 28 போட்டிகளில் 11 வெற்றிகளைப் பெற்றிருந்த நிலையில், அதை முறியடித்து கோலி தலைமையில் இந்திய அணி 26 போட்டிகளில் 12-வது வெற்றியைப் பதிவு செய்தது.
  • டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன் எனும் பெருமையை 27 வெற்றிகளுடன் தோனி முதலிடத்தில் இருந்தார். அந்த சாதனையையும் கோலி சமன் செய்துள்ளார்.
  • இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளி்ல மே.இ.தீவுகள் அணி சேர்த்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 2006-ம் ஆண்டு கிங்ஸ்டனில் 106 ரன்களில் மே.இ.தீவுகள் அணி ஆட்டமிழந்திருந்தது.
  • மே.இ.தீவுகளுக்கு எதிராக 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ராவின் பந்துவீச்சு இந்திய வீரர்களில் மிகச்சிறப்பானதாகும். அதாவது குறைந்த ரன்களில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் எனும் பெருமையை பும்ரா பெற்றார். இதற்கு முன் வெங்கடபதி ராஜீ 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இலங்கைக்கு எதிராக வீழ்த்தி இருந்தார். இப்போது பும்ரா அவரைக்காட்டிலும் குறைவாக 7 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
  • டெஸ்ட் போட்டிகளில் பும்ரா 4-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள் ஆகிய அணிகளுக்கு எதிராக அந்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய அணிகளைச் சேர்ந்த முதல் பந்துவீச்சாளர் எனும் வரலாற்றை பும்ரா படைத்தார்.
  • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 வெற்றிகளுக்கு மேல் பெற்ற மூன்றாவது இந்தியக் கேப்டன் எனும் பெருமையை கோலி பெற்றார். இதற்கு முன் அசாருதீன், தோனி மட்டுமே பெற்ற நிலையில் கோலியும் அந்த வரிசையில் இணைந்தார். அதேசமயம் 100 வெற்றிகளைப் பெற்ற கேப்டன்கள் வரிசையில் 12-வது கேப்டனாகவும் கோலி இடம் பெற்றார்.
  • 318 ரன்கள் வித்தியாசத்தில் மே.இதீவுகள் அணிக்கு எதிராக பெற்றி இந்திய அணியின் வெற்றி வெளிநாடுகளில் பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும். இதற்கு முன் இந்திய அணி பெற்ற 3 வெற்றிகளும் உள்நாட்டில் பெற்றவையாகும்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x