Published : 24 Aug 2019 08:05 PM
Last Updated : 24 Aug 2019 08:05 PM

பன்முகத் திறமைகளை ‘ஆதாயம் தரும் இரட்டைப்பதவி’ என்பதா?’ - பிசிசிஐ மீது கங்குலி காட்டம்

பிசிசிஐ விதிமுறைகளில் ஏற்கெனவே உள்ள ஆதாயம் தரும் இரட்டைப் பதவி குறித்த விஷயங்கள் மாற்றப்பட வேண்டும் என்று சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

சமீபத்தில் ராகுல் திராவிட்டின் இந்தியா சிமெண்ட்ஸ் பதவியை வைத்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பிய போது இந்திய கிரிக்கெட்டை கேடுகாலம் பீடித்திருக்கிறது என்று விமர்சனம் செய்தார்.

இந்நிலையில் மீண்டும் அவர் கேள்வி எழுப்பியபோது, “முன்னாள் வீரர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பதல்ல என் வாதம். விதிமுறை நடைமுறைரீதியாக இருக்க வேண்டும்.

இரட்டைப்பதவி என்றால் முரண் நலன் என்றால் எப்படி? திராவிட் இன்று தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளராக இருக்கிறார், ஆனால் அவர் இந்தியா சிமென்ஸ்ட்ஸ் பதவியில் முதலிலிருந்தே இருக்கிறார், நாளை என்சிஏ பதவி இருக்கலாம் இல்லாமல் போகலாம் அதற்காக பணிப்பொறுப்பை உதற முடியுமா? ஏனெனில் இந்தியா சிமெண்ட்ஸ் வேலை நிரந்தரமானது. ஆகவே பிராக்டிக்கலாக தீர்வு காண வேண்டும், வர்ணனை செய்வது, பயிற்சியளிப்பது போன்றவை கூட ஆதாயம் தரும் இரட்டைப் பதவி என்று கூற முடியாது.

ரிக்கி பாண்டிங்கை எடுத்துக் கொள்ளுங்கள், டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர், உலகக்கோப்பையில் ஆஸி. அணிக்காக பணியாற்றினார், ஆஷஸ் தொடரில் வர்ணனை செய்கிறார். மீண்டும் அடுத்த ஏப்ரலில் டெல்லி கேப்பிடல்ஸுக்கு வந்து விடுவார்.

இதை ஆதாயம் தரும் முரண் நலன் என்பதாக நான் பார்க்கவில்லை. ஏனெனில் இவையெல்லாம் ஒருவருடைய திறமை சம்பந்தப்பட்டது. திறமை காரணமாக, ஒரு பணிக்கு நாம் பொருத்தமாக இருப்போம் என்று சிலர் நினைப்பதால் அதை எங்களுக்கு அளிக்கிறார்கள். இதெல்லாம் முரணா? இரட்டைப் பதவியா? துல்லியமாக வரையறுக்க வேண்டும் இல்லையெனில் எதை வேண்டுமானாலும் ஆதாயம் தரும் இரட்டைப்பதவி என்று கூறிக்கொண்டிருக்க வேண்டும்.

விக்ரம் ராத்தோர் விவகாரத்தை ஆதாயம் தரும் இரட்டை நலன் விவகாரம் என்று கூறுவது முட்டாள்தனம் என்று சாடினார் கங்குலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x