Published : 24 Aug 2019 05:13 PM
Last Updated : 24 Aug 2019 05:13 PM

மிகவும் சாதாரண பந்துகள், பிரமாதமான பந்து வீச்செல்லாம் ஒன்றுமில்லை: இந்திய பந்துவீச்சு குறித்து ராஸ்டன் சேஸ்

முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி 2ம் நாள் முடிவில் 189 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்திய அணி முன்னதாக ஜடேஜாவின் அபார அரைசதத்துடன் 297 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் மே.இ.தீவுகள் அணியில் 4 வீரர்களே 20 ரன்களைக் கடந்தனர், ராஸ்டன் சேஸ் 48 ரன்கள் என்று அதிகபட்சமாக ரன் எடுத்தார். இந்தியப் பந்து வீச்சு சாதாரணமாகவே இருந்தது, சிறப்பு வாய்ந்ததாக ஒன்றுமில்லை, நாங்கள் எளிதாக விக்கெட்டுகளை சாதாரணப்பந்துகளுக்கு கொடுத்தோம் என்று தெரிவித்தார்.

அவர் மே.இ.தீவுகள் பேட்டிங் பற்றி கூறியதாவது:

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சில நல்ல தொடக்கக் கூட்டணி அமைத்தோம். புதிய பந்து பளபளப்பு போன பிறகு மிடில் ஆர்டர் ரன்கள் எடுக்க வசதியாக இருந்தது. இந்தத் தொடரில் டாப் ஆர்டர் மீண்டும் அந்த மாதிரி ஆட வேண்டிய தேவை உள்ளது.

பொதுவாக மிடில் ஆர்டரில் நாங்கள் நல்ல பங்களிப்பு செய்வோம், ஆனால் டாப் ஆர்டர் பேட்டிங் ஸ்கோர்களை கொண்டு வர வேண்டும். பெரும்பாலான வீரர்கள் நன்றாகத் தொடங்கி விக்கெட்டைத் தூக்கி எறிந்தனர். பிட்ச் முதல் நாள் ஈரப்பதம் காய்ந்து கொஞ்சம் வேகமடைந்தது, இதனை பேட்டிங்கில் நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் விக்கெட்டுகளை பறிகொடுத்தோம்.

இது கவனமின்மைதான் எங்களில் ஒருவருக்குக் கூட சிறப்பு வாய்ந்த பந்தோ, விளையாட முடியாத பந்தோ வீசப்படவில்லை. நாங்கள் மோசமாக ஆடி விக்கெட்டுகளைப் பறிகொடுத்தோம் அவ்வளவே, அதாவது சாதாரண பந்துகளுக்கு விக்கெட்டை வாரி வழங்கினோம் அவ்வளவே.

நானும் கூட கிரீஸில் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் நின்று அணியை முன்னிலைக்கு அருகில் கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் கவனமின்மைதான் என் விக்கெட்டையும் இழக்க நேரிட்டது. பந்து நேர் பந்துதான் அது என் அருகில் வரும் வரை விட்டிருக்க வேண்டும், ஆனால் செய்யவில்லை இதனால் பந்து காற்றில் சென்றது. பந்தை நன்றாக வரவிட்டு கைகளைத் தளர்த்தி ஒரு ரன்னுக்கு தள்ளியிருக்கலாம்.

அதே போல் காலையில் ஜடேஜாவையும் இஷாந்த் சர்மாவையும் ஆடவிட்டோம் இது தவறு. அதிகமாக பல்வேறு முயற்சிகளைச் செய்தோம், விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும், இஷாந்த் சர்மா, ஜடேஜா இதனை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர். பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலையை எங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தவில்லை, மற்றபடி பந்து வீச்சு ஒன்றும் பிரமாதமாக இருந்தது என்று கூற முடியாது.

இவ்வாறு கூறினார் ராஸ்டன் சேஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x